பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161

4. ஏலேலோ கொள்கை (The yo—he—ho—theory)

சுமை தூக்குதல் வண்டியிழுத்தல், படகோட்டுதல் முதலாய கடினமான தொழிலாற்றுவோர். தம் உழைப்புச் சுமையை மறப்பதற்காகப் பல்வேறு ஒலிகளை எழுப்புதல் உண்டு. அவ் வொலிகளுள் சில காலப்போக்கில் குறிப்பிட்ட தொழில்களை உணர்த்திச் சொற்களாதல் உண்டு, இசைக்கு அடிப்படையான சொற்கள் இவ்வாறு தோன்றியிருக்கலாம்.

இவ்வாறே சொற்கள் படைக்கப்பட்டன என்பது இக் கொள்கையாளரின் கருத்தாகும். - 5. urtG Qom f Garsirsms (The lyric theory)

உணர்ச்சிப் பெருக்கால் வெளிப்படும் இனிய ஒசை, அவ் வுணர்ச்சிகளை உணர்த்திச் சொல்லாதலும் உண்டு. மொழி களில் செய்யுள் வடிவே முதலில் அமைந்தமைக்கு இதுவே காரணமாகலாம். உணர்ச்சி ஒலிகள்-பாட்டு ஒலிகள்-மழலை ஒலிகளைப் போல இன்பந்தர வல்லன. குறிப்பிட்ட ஒலிகளே திரும்பத் திரும்ப வந்து, அவ் வொலிகளுக்குக் காரணமான உணர்ச்சிகளை உணர்த்திச் சொற்கள்ாதல் உண்டு.

இவ்வாறே சொற்கள் படைக்கப்பட்டன என்பது இக் கொள்கையாளரின் கருத்தாகும். s

இவ் வைந்தனையும் தனித்தனியே நோக்குங்கால், ஒவ் வொன்றும் மொழியின் சில கூறுகளை உணரத் துணை செய்யுமே தவிர, மொழி முழுமைக்கும் காரணமாகா. மொத்தமாக நோக்குங்கால் இவ் வைந்தும் மொழியின் தோற்றத்திற்குக் காரணமாகலாம்.

தொல்காப்பியர், பவணந்தி முதலாய தமிழிலக்கணிகள் சிலரும் இவற்றாேடு ஒத்த கருத்துகளை வெளியிட்டுள்ளனர். ‘இசையினும் பண்பினும் குறிப்பினும் தோன்றி’ என உரிச் சொற்களின் தோற்றத்திற்கு விளக்கம் தருகிறார் தொல்காப் பியர். இசை, பண்பு, குறிப்பு எனும் மூன்றனையும் அடியாகக்

1 I