பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

கொண்டு உரிச்சொற்கள் தோன்றின என்பது இத் தொடரின் கருத்தாகும். இம் மூன்றும் மேற்கூறிய ஐந்து கொள்கைகளை யும் தன்னுள்ளடக்கியுள்ளமை நோக்குவார்க்குப் புலகுைம்.

சொல்லுக்கும், அதன் பொருளுக்கும் இடையேயுள்ள தொடர்பு காரண காரியம் பற்றியது எனத் திட்டவட்டமாகக் கூறல் இயலாது.

முதலில் இடுகுறியாக அமைந்த சொற்களுள் சில, வளர்ச்சி. பெற்ற நிலையில் காரணமும் காட்டத் தொடங்கின. இது பற்றியே பவணந்தியாரும்,

‘இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின

என்றார். எனினும், ஒவ்வொரு சொல்லுக்கும், அதனதன் பொருளுக்கும் இடையேயுள்ள தொடர்பினை அறிதல் அவ்வளவு எளிதன்று. இதுபற்றியே தொல்காப்பியரும்,

மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா’

என்றார், மக்கள் வழங்கும்.மொழிக்குப் புலவர்கள் வடிவு தந்து அதனை எழுத்து வடிவில் உலவவிட்டு நிலைபெறச் செய்தார்கள். இதனை உணராது புலவர்களே மொழிகளைப் படைத்தனர் எனல் பொருந்துவதன்று. -

தமிழ்மொழி வரலாற்றை அறிவதற்குத் தமிழ் இலக்கண நூல்கள் மிகவும் துணை செய்கின்றன. அவை அவ்வக் காலங் களில் வழங்கிய சிறப்பு வழக்குகளையும், வடிவங்களையும் உணர்த்திக் காலப்போக்கில் மொழி அடைந்து வரும் மாற்றங் களைக் காட்டிவருகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை சாசனச் சான்றுகளும் இம் மாற்றங்களைக் காட்ட ஓரளவு துணை செய்கின்றன.

காலந்தோறும் தோன்றி வரும் இலக்கியங்களும், அவ் விலக்கிய வழக்குகளை ஆராய்ந்து தரும் ஆய்வுக் கட்டுரை களும் மொழி வரலாற்றுக்குத் துணை செய்கின்றன.