பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163

இலக்கணங்களுக்கு எழுதப்பட்ட உரைகள் அவ்வக் காலங்களில் தோன்றிய வழக்காறுகளை அறிய உதவுகின்றன.

மெகாஸ்தனீசு, பிளைனி, தாலமி, யுவான்சுவாங்கு, மார்க்க போலோ முதலியோர் தத்தம் காலங்களில் எழுதி வைத்த குறிப்புகளும் சில வழக்குகளை அறிய உதவுகின்றன. அவர்கள் தமிழ்ச் சொற்களை எவ்வாறு கேட்டுஉணர்ந்தார்கள் என்பதையும் அக் குறிப்புகள் விளக்குகின்றன.

மொழியாராய்ச்சி எனும் தொடரில் மொழி என்பது இலக்கியத்தை மட்டும் குறிப்பதன்று: பேச்சு மொழியையும் குறிக்கும். வழக்கும் செய்யுளும் என இரண்டனையே தொல்காப்பியர் குறிப்பிடுகிறார் வழக்கு என்பது உரைநடை இலக்கிய வழக்கைக் குறிப்பதெனக் கூற இயலாது. அக் காலத்தில் இலக்கியம் என்பது செய்யுளாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆஞல், வழக்குஎன்பது பேச்சுவழக்கையே குறிப்ப தாகும.

அளவுப் பெயர், நிறைப் பெயர், திசைப் பெயர், மரப் பெயர் முதலியன அடைந்த மாற்று வடிவங்களைத் தொல் காப்பியர் காட்டுவதால் அவற்றை இலக்கிய வழக்குதி சொற்கள் எனக் கொள்வதைவிடப் பேச்சு வழக்கும் சொற்கள் எனக் கொள்வதே பொருத்தமாகும்.

வடவேங்கடத்திற்கும், தென்குமரிக்கும் இடைப்பட்ட பகுதியே தமிழ்மொழி வழங்கிய நிலப்பரப்பாகும். திராவிட மொழிகளுள் தமிழும் ஒன்று.