பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. திராவிட மொழிகள்

1856 ஆம் ஆண்டு அறிஞர் கால்டுவெல் வெளியிட்ட ஒப்பிலக்கணத்தில், தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம்,’ துளு, குடகு என்னும் ஆறனையும் திருந்திய மொழிகள் எனவும், துதம், கோதம், கோண்ட, கோந்த் அல்லது கூ (ku), ஒரோஒன் (Oraon), ராஜ்மஹால் எனும் ஆறனையும் திருந்தா மொழிகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இப் பொழுது திராவிட மொழிகள் இருபத்திரண்டு எனக் கண்டுபிடித்துள்ளனர்.”

பிராஹா மொழி ஒன்று மட்டும் பாரத நாட்டைக் கடந்துள்ளது. ஏனையவற்றுள் தமிழ், தெலுங்கு, கன்னடம்: மலையாளம், துளு, குடகு என்பவை தென்னிந்தியாவில் பேசப் படுகின்றன. வட ஈழத்திலும், தென் ஆப்பிரிக்காவிலும், மலேயா, சிங்கப்பூர்ப் பகுதிகளிலும் தமிழ் மிகுதியாய்ப் பேசப் படுகிறது. ஏனைய திருந்தா மொழிகள் வட இந்திய மலைப் பகுதிகளில் பேசப்படுகின்றன.

மேற்குப் பாகிஸ்தானில் பேசப்படும் பிராஹா மொழியும், வங்காளத்திலும், ஒரிசாவிலும் பேசப்படும் குருக் மால்தோ மொழிகளும் வட திராவிட இனத்தைக் சார்ந்தவை எனவும்,

1. கால்டுவெல் ஒப்பிலக்கணம்-பக். 6 2. C. D. P---L. 14, i5