பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

இலக்கிய மொழிகள் நான்கனுள்ளும் தமிழே தொன்மை யும், இலக்கிய வளமும், இடப்பரப்பும் கொண்ட மொழியா கும். அதன் ஒலி அமைப்புப் பழந்திராவிட ஒலியமைப்பைக் கொண்டது. ஓரளவு சொல்லமைப்பாலும் இலக்கண அமைப் பாலும்கூட ஒற்றுமை உடையது. 1960ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் தமிழ் பேசுவோர் தொகை 30,465,442 ஆவர். ஈழத்தில் 2,500,000; பர்மா, மலேசியா இந்தோனேசியா, வியட்நாம் பத்து லட்சம்; கிழக்குத் தென் ஆப்பிரிக்கப் பகுதிகளில் 250,000 எனக் கணக்குத் தரப்பட் டுள்ளது. தமிழின் பழைய இலக்கிய நூல் கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகும். பிராமி எழுத்தில் எழுதப் பட்ட முதல் கல்வெட்டுகளும் இக் காலத்தைச் சார்ந்த வையே,ே

தொன்றுதொட்டுச் செந்தமிழ், கொடுந்தமிழ் எனத் தமிழ் பாகுபாடு செய்யப்பட்டு வருகிறது. “வடவேங்கடம், தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ எனத் தொல் காப்பியப் பாயிரம் கூறுவதால் இதுவே பழங்காலத்துத் தமிழக மாக இருந்திருக்க வேண்டுமெனத் தெரிகிறது. சென்னைப் பகுதித் தமிழ், கொங்குநாட்டுத் தமிழ், தெற்குப் பகுதித் தமிழ், ஈழத் தமிழ் என இன்றைய பேசிசுத் தமிழை நால் வகையாய்ப் பிரித்துக் காண்பர். இடத்திற்கு ஏற்ப வேறுபடுவ தோடு சாதி வகைக்கு ஏற்பவும் பேச்சுத்தமிழ் வேறுபடுகிறது:

மலையாளமும் இடவகையால் தென் கேரளம், மத்திய கேரளம், வடகேரளம் எனப் பேச்சு நிலையில் வேறுபடுகிறது. வட்டார மொழிகளே பன்றிச் சாதி, சமய வேறுபாட்டை ஒட்டியும், நம்பூதிரி, நாயர், மாப்பிளா, புலையா, நசராணி என இனத்தையொட்டியும் திரிபு பெற்றுள்ளது என்பர்.