பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167

1981ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி கேரள நாட்டில் மலையாளம் பேசுவோர் தொகை 16,994,919, இடைக் கால மேற்குப் பகுதிப் பேச்சுத் தமிழே இலக்கிய மலேயாளமாக மாறிவிட்டது. 10ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் சாசனச் சான்றுகள் கிடைக்கின்றன. 13, 14 நூற்றாண்டு . களில்தான் மலையாளம் தனித்து இயங்கி இருக்க வேண்டும்.

நீலகிரி மலைப் பகுதிகளில் மலவாழ் மக்களுள் சிலர் திராவிட மொழிகளைப் பேசி வருகின்றனர். கொதகிரி மலைப் பகுதியில் மலையாளம் பேசுவோருள் கொதவர்கள் 862: தொதவர்கள் 765 (இவர்கள் ஆடு மாடு மேய்ப்போர்) பதகர்கள் (விவசாயிகள்) 85463, (இவர்கள். மொழியைக் கன்னடப் பேச்சு மொழியின் திரிபு என்பர் சிலர்). இருள மொழி பேசுவோர் 4.124. கூர்க்கில் குடகு மொழி பேசுவோர் தொகை 78,202 என்பர்.1

மைசூர் நாட்டில் கன்னடம் பேசுவோர் தொகை 17:415,827: தமிழகப் பகுதியிலும் ஆங்காங்கே கன்னடம் பேசுவோர் உளர். கன்னடத்தில் கி.பி. 450 முதல் பழைய சாசனங்கள் கிடைக்கின்றன. பழந்திராவிடத்திலிருந்து கன்னடம் கி. மு. ஐந்து, நான்காம் நூற்றாண்டிலேயே பிரிந் திருக்க வேண்டும். கி. பி. 9, 10ஆம் நூற்றாண்டுகளிலேயே கன்னட இலக்கியங்கள் தொடங்குகின்றன என்பர்.”

இலக்கிய நடை வேறு, பேச்சு நடை வேறு எனக் கன்னட மொழி இயங்கி வருகிறது. பிராமணர் பேசுவது, பிராமண ரல்லாதார் பேசுவது, ஹரிஜனங்கள் பேசுவது எனக் கன்னடப் பேச்சு மொழி மூவகையாகப் பிரிந்து இயங்குவதாகக் கூறுவர். சாதிப் பிரிவு அடிப்படையில் மட்டுமன்றி, இடவேறுபாட் டாலும் கன்னடம் தார்வார், பங்களுர், மங்களுர் என மூவகையாகத் திரிபு பெற்றுள்ளது என்பர்.”

1. C. D. P.–udi. 16 8. C. D. P.-Lu. 17 2. . D. . —3; . 16