பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169

பேசுவோர் தொகை 12,298; கொரபுட்டிலும், அதைச் சார்ந்த ஆந்திரப் பகுதிகளிலும் கத்பா மொழி பேசுவோரின் தொகை 2000: பெங்கோவும், மண்டாவும் இப்பொழுது திராவிட மொழிகளுள் சேர்க்கப்பட்டுள்ளன. சந்தாவில் பேசப்படும் நயிகி என்பதும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. கோந்த் மொழி பேசுவோர் தொகை 600,000; குயி (Kul) மொழி பேசுவோர் தொகை 510,907; குவி (Kuwi) மொழி பேசுவோர் தொகை 168,027.

மத்தியப் பிரதேசத்தில் கோந்த் மொழி பேசுவோர் பல வகைத் திரிபு மொழிகளைப் பேசுகின்றனர். பீஹார், ஒரிசா மத்தியப் பிரதேசங்களில் குருக் (Kurukh) மொழி பேசுவோர் தொகை 1, 132.931. (இதனை ஒரோஒன் என்றும் கூறுவர்.) பீஹார், மேற்கு வங்காள எல்லையோரங்களில் மால்தோ பேசுவோர் தொகை 88,645; இது குருக் மொழியோடு நெருங் கிய தொடர்பு கொண்டுள்ளது.*

மேற்குப் பாகிஸ்தானில் பிராஹாமொழி மட்டும் பேசப் படுகிறது. இஃது ஈரானிய மொழியாலும், இந்தோ-ஆரிய மொழிகளாலும் பெரிதும் திரிபுற்று விளங்குகிறது. பிராஹா மொழியை 200,000 பேர் பேசுகிறார்கள். தென் ஆப்கான்ரிஸ் தானத்தில் மட்டும் 400,000 பேர் பிராஹா மொழி பேசுவ தாய்த் தெரியவருகிறது.2

பழந்திராவிடத்திலிருந்து கி. மு. 15ஆம் நூற்றாண்டுக்கு முன்பே தென் திராவிட மொழிகள் பிரிந்திருக்க வேண்டும் தெலுங்கு, துளு முதலிய மொழிகள் கி. மு. 10 முதல் 6 நூற்றாண்டுகளில் பிரிந்திருக்க வேண்டும். கி. மு. 4, 3ஆம் நூற்றாண்டுகளிலேயே கன்னடமும், தமிழும் வேறு வேருக இயங்கி இருக்க வேண்டும். தமிழும், கன்னடமும் ஒன்றாக இயங்கிய காலத்தில் ககரம், சகரமாகத் திரிபு பெறவில்லை. பிற்காலத் தில் தமிழ் மொழியில் பல மொழி முதற் ககரங்கள் சகரமாகத்

1 - C. D. Ρ. -பக். 18 .2. C. D. P. -பக் 18