பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

திரிந்துவிட்டன. கன்னடத்தில் இன்றும் அவை திரிபு பெருமல் வழங்குகின்றன. தமிழ், கன்னடப் பிரிவை உணர்த்துதற்கு இதுவே தக்க சான்றாகும்.

கன்னட வடிவமே தமிழின் தொல்வடிவங்கள் என்ப தற்கு இவை சான்று புகரும்.

கன்னடம் தமிழ் கெல சில கிறி சிறி இ

இ, ஈ, எ, ஏ, ஐ (அய்) தொடரும் ககர முதற் சொற்கள் எல்லாம் தமிழில் சகரமாகிவிட்டன. கெம் என்பது செம் எனத் திரிபு பெற்றுள்ளது. கெம்பு என்பது கன்னடசி சொல் என்றும், அது பிற்காலத்தில் தமிழில் புகுந்ததால் திரிபு பெறவில்லை என்றும் கூறுவர். கன்னடத்தில் அண்ண மெய்யாதல் என்னும் விதி அமையவில்லை.

கன்னட, தெலுங்கு மொழிகளில் வழங்கும் எகரமும், ஒகரமும் தமிழ், மலையாள மொழிகளில் இகர, உகரமாயின என்பர்.

செய்யும் என்னும் வாய்பாடு, முற்றுப் பொருளில் பலர் பாலுக்கு வாராது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது கன்னடத்தில் அஃது எல்லாப் பால்களிலும் வருகிறது. இவ் வரையறை ஏற்பட்ட பிறகே தமிழிலிருந்து கன்னடம் பிரிந் திருக்க வேண்டும் எனக் கூறுவர்.

இதே காலத்தில்தான் தொதவரும், கொதவரும் தமிழ் இனத்திலிருந்து தனியே பிரிந்திருக்க வேண்டும். அதன் பிறகே அவர்கள் மொழி வகையாலும், சமூகப் பழக்க வழக்கங் களாலும் தனித்தியங்கி மலைப் பகுதிகளில் ஒதுங்கி வாழத் தலைப்பட்டனர் எனத் தெரிகிறது.”

1. . D. .—. 19 2. C. O. P.-பக். 19