பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171

கன்னடம் தமிழிலிருந்து பிரிந்த பிறகே தொல்காப் பியமும், அகத்தியமும் தமிழுக்குத் தனி இலக்கணம் வகுத் திருக்கவேண்டும்; செய்யுள் இலக்கணம், வழக்கு இலக்கணம் என இருவகை இலக்கண வரையறை தோன்றியிருக்க வேண்டும்.

தமிழும், மலையாளமும் கி. பி. 13, 14ஆம் நூற்றாண்டு களிலேயே முழுப் பிரிவு அடைந்தன. தமிழில் நன்னூலும், மலையாளத்தில் லீலாதிலகம் எனும் இலக்கணமும் இக் காலத் துத் தோன்றின.

திராவிட மொழிகள் சித்திய இனத்தைச் சார்ந்தவை என்னும் கருத்தே நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது. சித்திய மொழிகளுள்ளும் உரலியம், அல்தெய்க் மொழி 5Garr(957cir (Uraliyam and AItalc) o-pa; o.col-tugar arciruf. மொழி வகையால் மட்டுமன்றி, இனஉறவு வகையாலும் இம் மொழி இனங்களோடு திராவிட இனம் நெருங்கிய தொடர் புடையன என்பர். இக் கருத்தினை டாக்டர் கால்டுவெல் மட்டுமன்றிப் பேராசிரியர் பர்ரோவும் வற்புறுத்தியுள்ளார்.

- தென் திராவிடத்தின் தனிக் கூறுகளாகக் கீழ் வருவன வற்றைக் காட்டுவர்.

‘(1) தென் திராவிட மொழிகள் அல்லாத ஏனைய மொழிகளில் பெண்பால் ஒருமைக்கும், அஃறிணை ஒன்றன் பாலுக்கும் ஒரே விகுதியே வருகிறது. தென் திராவிட மொழி களிலேயே இரண்டுக்கும் இரு வேறு விகுதிகள் காணப் படுகின்றன. தெலுங்கு இவ் வகையில் மத்திய திராவிட

1. C. D. P.-L. 21

2. So far the most ambitious, the most Promising and the most convincing hipothesis is that of urallyam and Altaic relationship with Dravidlan not only lingulstlc but also anthropological, ethnograph archaeological and general historic considorations may point in this diretion-C. D. P. L. 22