பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

திராவிடப் பகுதிகளின் சாயலாலும் இவ்வமைப்புக்கு மாருகப் பல சொற்கள் ஒலிக்கின்றன; மொழிமுதற்கண் மெல்லொலி களாக ஒலிக்கின்றன. இவ்வாறு ஒலிப்பது பண்டைத் திராவிட ஒலியியல் முறை அன்று என்பதும், அது பிற்காலத்து மாறுதல் என்பதும் பேராசிரியர் பர்ரோவின் கருத்தாகும். இவ்வாறு மாறி ஒலிப்பதற்கு அவர் நான்கு காரணங்களைக் காட்டுவார். -

1. கன்னடத்திலும் தெலுங்கிலும் உள்ள க (g), த (d) எனத் தொடங்கும் சொற்களுள் பல தமிழில் இல்லை.

கம்பெ (gampe)-கன்; கம்ப (gampa) . தெலுங்கு. இவை கூடை என்னும் பொருள் தரும் சொற்களாகும்.

கிஞ்சு (ginju)-கன்; கிஞ்ச (ginia) . தெலுங்கு - இவை விதை என்னும் பொருள் தரும் சொற்களாகும். இவை தமிழில் வழங்கப் பெறவில்லை. 2. கன்னட, தெலுங்குச் சொற்கள் சில தமிழில் வந்து வழங்குங்கால் அவற்றிலுள்ள வல்லெழுத்துகள் மெல்லொலி யாக ஒலித்தல் உண்டு.

குமுகு (gumuku) - தெலுங்கு: குமுக்கு-தமிழ் கெலுசு (தெலு), கெலி (தமிழ்) 3. பழஞ்சொற்களிலும் ஒலி ஒற்றுமை இருந்தாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே வகையான ஒலி இருப்பது இல்லை என்பர். .

காதல் - g(கன்); காதிலி (gadi):தெலு: காதல் (தமிழ்) கொடெ (கன்), கொடுகு (godugu).தெலு: குடை (தமிழ்)

கிளி (gill) (கன்) சிலுக (தெலுங்கு) கிளி (தமிழ்) 4. சில கன்னட, தெலுங்கு சொற்களில் மொழி முதற்

கண் மெல்லொலி பெறுதல் பிற்காலத்து மாறுதலாகும். அவை மரூஉச் சொற்களாகவும் உள.