பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

பெரும்புலி (தமிழ்) - பெப்புலி (bebbuli)-தெலு.

திருந்து(தமிழ்)-தித்து (diddu)-தெலு: தித்து(tiddu)-கன்

குருடன்-தமிழ் குட்டி (guddi)-தெலு: குருடி, குட்டி-கன்

குருவி (தமிழ்); குப்பி (gubbi) -கன்.

QU(5-31lp; @Lif3 (perda), GL 55 (pedda) தெலுங்கு. இம் மரூஉச் சொற்களில் ஒலிப்பு (voiced) ஒலிகளே உள்ளன.

இந் நான்கு காரணங்களைக் கூறி ஏனைய திராவிட மொழி களும் மெல்லொலி பெற்றிருப்பதை வலியுறுத்துவர். தமிழ் ஒலிப்பு முறையே பழைய திராவிட மொழியின் ஒலிப்பு முறை என்பது பேராசிரியர் பர்ரோவின் கருத்தாகும். இது டாக்டர் கால்டுவெல்லின் கருத்துக்கு அரண் செய்வதாக அமைகிறது. மொழி முதற்கண் வல்லொலியாக ஒலித்தலே திராவிட மொழியின் தொல்லியல் என்பதும், அஃது இன்றுவரை தமிழில் மாருமல் போற்றப்படுகிறது என்பதும் அவர் கருத்து களாகும்.

பழந்தமிழ்மொழி முதற்கண் அன்றி ஏனையிடத்தும் வல்லொலியே பெற்றிருந்தது என்பதற்குப் பின்வரும் சான்று களைக் காட்டுவர்.

1. தொல்காப்பியர் உயிர்களை முதல் ஒலி, சார்பொலி என இரு வகையாகப் பிரிப்பர்; குறில் இ, குறில் உ, ஆய்தம்

1. Tamil alone among the Dravidian languages represents the state of affairs in the parent languages in this matter, Telugu and Kanarese have for reasons that are obscure in most inatances Introduced secondary voicing into primitive Dravidian words. At the same time a large percentage of words beginning with the voiced stops in these languages are of extra-Dravidlan origin. —Collected papers on Dravidian Linguistics. —page 17.