பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

எனும் மூன்றையும் சார்பொலிகள் எனக் குறிப்பிடுவர். வல்லினத்திலும் இரு வகை ஒலிகள் வழங்கியிருந்தால் அவற்றை எடுத்துக்காட்டாமல் இருந்திரார்: வல்லினம் க ச ட த ப ற ஆறே என்று மட்டும் குறிப்பிடுகிரு.ர்.

2. மொழியீற்றின்கண் வல்லொலி தனித்து இடம் பெறுவதில்லை. மொழி முதலிலும் இடையில் தனித்தும் இரட்டித்தும் மெலியடுத்தும் வருமிடத்தும் வல்லொலியே இடம் பெற்றது.

L156)—pakal

Lib—pakkam

usGj-panku

(இக் காலத்தைப் போலச் சூழ்நிலைக்கேற்ப மாறி ஒலிக்கும் நிலை அன்று இல்லை என்பர் P. S. சுப்பிரமணிய சாஸ்திரி.)

3. கி. மு. மூன்றாம் நூற்றாண்டுக் குரியன எனக் கருதப் படும் குகைக் கல்வெட்டுகளில் மொழிமுதற்கண் ஒலிப்பு ஒலி (voiced) காணப்படவில்லை. பிராமி எழுத்தில் எழுதப்பட்ட சொற்கள் பிராகிருதமும் தமிழும் கலந்தவை. அவற்றுள் எந்தத் தமிழ்ச் சொல்லும் ஒலிப்புத்தடை ஒலியைப் (voiced stop) பெற்றிருக்கவில்லை. எல்லாச் சூழ்நிலைகளிலும் தமிழ்ச் சொற்களில் தடை ஒலிகள் வல்லொலிகளேயாகும்.

4. பல்லவர் காலத்திலும் சோழப் பேரரசர் காலத்திலும் கிரந்த எழுத்துகள் வடமொழிக் கல்வெட்டுகளில் இடம் பெற்றன. அவற்றுள் உள்ள தமிழ்ப் பெயர்கள் சில எல்லாச் சூழ்நிலைகளிலும் ஒலிப்பில் வல்லொலிகளாகவே (Voice. less Stops) இடம் பெற்றுள்ளன. அக் கல்வெட்டுகளில்

தமிழ் எழுத்தியல் என்றும் இன்றும்-க்.ெ 2. தமிழ் எழுத்தியல் அன்றும் இன்றும்-பக். 168.