பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175

தோழனை எலுவன் என்றும், தோழியை இகுளை என்றும், மலைநாட்டார் நீரை வெள்ளம் என்றும், புனல் நாட்டார் தர்யை ஆய் என்றும் வழங்கினர் என்பர்.

இப்பொழுதும் நீரைக் குறிக்க மலையாள மொழி வெள்ளம் என்ற சொல்லையே கையாளுகிறது. அச்சன் என்ற சொல்லும் மலையாள வழக்கிலுள்ளது. இகுளே, கேணி, செய், எகின், ஆய், பெற்றம் முதலிய சொற்கள் எல்லாம் பழந் தமிழில் இலக்கியச் சொற்களாகவே வழங்கியுள்ளன. எகின் என்பதைத் தொல்காப்பியர் மரப் பெயராகவே குறிப் பிட்டுள்ளார்.

பற்றின் காரணமாகச் சிலர் சோழநாட்டைச் செந்தமிழ் நாடு என்றும், பாண்டிய நாட்டைச் செந்தமிழ் நாடு என்றும் கூறி வந்தனர். செந்தமிழ் இலக்கியம் பயிலும் தமிழகத் தையே செந்தமிழ் நாடு என்று குறிப்பதில் தவறில்லை என்ற கருத்தால் பாரதியார் செந்தமிழ்நாடு என்று தமிழகத்தைக் குறிப்பிட்டார்.

தனிப்பாடலொன்று கொடுந்தமிழ் நாடுகள் இவை எனக் குறிப்பிடுகிறது.

தென்பாண்டி குட்டம் குடங்கற்கா வேண்பூழி பன்றி அருவா அதன்வடக்கு-கன்றாய சீதமலாடு புனல்நாடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருகாட் டெண்.

முதலில் தமிழ் கிளைமொழியாகத் திரிபு பெற்றது. பேச்சு வழக்குத் தமிழே கிளைமொழியாகும். ஒரு மொழி இடத்துக்கு இடம் வேறுபட்டுத் தனி வழக்குகளைப் பெறுமாயின் அது கிளைமொழி எனப்படும். பொது மொழியோடு பெரும்பாலும் ஒத்துச் சிறுபான்மை வேறுபடுவது கிளை மொழி எனினும் ஒக்கும். பொதுமொழியோடு மிகுதியாக வேறுபட்டு இயங்கும் நிலையை ஒரு மொழி பெற்றுவிட்டால் அஃது இனமொழி எனப்படும். தமிழின் கிளைமொழியாக இருந்த மலையாளம்