பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

இன்று பெரிதும் வேறுபட்டு இனமொழியாக வழங்குகிறது. இவ்வாறே ஏனைய திராவிட மொழிகளும் ஒரு காலத்தில் கிளை மொழிகளாக இயங்கிப் பிறகு பெரும்பாலும் வேறுபட்டு இன மொழிகளாகி விட்டன என்பது வரலாற்றுண்மையாகும்.

இடத்துக்கு இடம் மொழி வேறுபடுதல் போலச் சேர்ந்து வாழும் இயல்புபற்றி மக்கள் சமூக நிலையிலும் தனித் தனிக் கிளை மொழிகள் வழங்காமல் இல்லை. சேரிவாழ் மக்கள் தனித்துச் சேர்ந்து வாழ்தலால் அவர்கள் மொழி தனிக்கூறு களும், திரிபுகளும் பெற்றுக் கிளை மொழியாக விளங்குகிறது. அவ்வாறே பார்ப்பனச்சேரி மொழியும் தனிக் கிளை மொழியாக இயங்கி வருகிறது. பார்ப்பனர் தமிழைச் சிதைத்து வழங்குவ தோடு, வடமொழியையும் ஆங்கில மொழியையும் மிகுதி யாகக் கலந்து பேசுகின்றனர். அவர்கள் பேச்சு மொழியில் உயிர் நீட்சியும் ஒலியிடம் பெயரலுமாகிய இருவகை நியதிகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. தமிழ்ச் சொற்களே வேற்று மொழிச் சொற்கள் போல் அவர்களிடம் வழங்குகின்றன. இப் பேச்சு நடையை இன்றைய திரைப் படங்கள் கையாண்டு வருகின்றன. நத்தையில் முத்து, சூரியகாந்தி, கவுரவம், வியட்நாம் வீடு, டைகர் தாத்தாச்சாரியார் முதலிய படங்கள் இப் பார்ப்பனச்சேரி மொழியை மிகுதியாகக் கையாண் டுள்ளன. -

உயிர்நீட்சி (முதல்)

அகமுடையான்-ஆம்படையான்

அகமுடையாள்-ஆம்படையாள்

தகப்பளுர்-தோப்பனர்

அகத்துக்காரி-ஆத்துக்காரி

உயிர்நீட்சி (ஈற்று நிலை)

அவர்கள்-அவாள் பிராமணர்கள்-பிராமணுள்