பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177

ஒலி இடம் பெயர்தல்

எனக்கு-நேக்கு உனக்கு-நோக்கு தமிழ்ப் பேச்சு மொழியில் ழகர, ளகர உச்சரிப்பு மாறுதல் குறிப்பிடத்தக்க திரிபாகும். தெற்குப் பகுதிகளில் இன்று ழகரம் ளகரமாகவே ஒலிக்கப்படுகிறது.

ஈரோட்டில் ளகரம் லகரமாகவே ஒலிக்கப்படுகிறது.

ஈழநாட்டில் ழகரம், எழுத்து வழக்கில் உள்ளதே தவிரப் பேச்சு வழக்கில் அறவே மறைந்துவிட்டது.

தஞ்சை மாவட்டத்தில் எண்பது என்பதை எம்பளது என்று குறிப்பர்.

அமங்கலத்துக்காகப் போடப்படுவது என்ற வழக்கில் பந்தல் என்பது செட்டி நாட்டில் வழங்குகிறது.

கோவையில் போடு என்னும் துணைவினையை மிகுதியாக வழங்குகின்றனர்.

ஏனைய பகுதிகளில் இடு அல்லது விடு எனும் துணை வினையை வழங்குகின்றனர்.

செய்து போட்டு வந்தான்-கோவை உரைத்திட்டு } செய்துவிட்டு வந்தான் ஏனைய பகுதி நிற்கிறாய் என்பது திருநெல்வேலிப் பகுதியில் நிக்கிறாய் என வழங்குகிறது. என்னடா நிற்கிறாய் என்பதனை என் னடா நிக்கி’ எனவும் வழங்குகின்றனர். இருக்கிறது என்பது வடஆர்க்காடு மாவட்டத்தில் :சீது என வழங்குகிறது.

வீரசோழியம் பதினேராம் நூற்றாண்டில் வழங்கிய ஒலித் திரிபுகளையும், சொல் திரிபுகளையும் குறிப்பிடுகின்றது. அதன் உரையாசிரியர் கொங்குநாட்டு வழக்குகளையும், சோழநாட்டு வழக்குகளையும், தொண்டைநாட்டு வழக்குகளையும் தனித் தனியே எடுத்துக் காட்டுகிரு.ர்.

13