பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

கொங்கு நாட்டுத் தமிழ் நாழி-நாளி உழக்கு-உளக்கு கோழி-கோளி வாழை-வாளை வழி-வளி முழை-முளை விளக்கு-விழக்கு பளிங்கு-பழிங்கு தளிகை-தழிகை

இவற்றால் ளகரமும் ழகரமும் ஒன்றாகவே கருதப்பட்டன என்பது புலகிைறது.

சோழ நாட்டு வழக்குகள்

றகரம் தகரமாய்த் திரிந்து, அத் தகரம் மீண்டும் சகர மாய்த் திரிந்து ஒலிக்கிறது.

வெற்றிலை-வெத்தில்-வெச்சில முற்றம்-முத்தம்-முச்சம் கற்றை-கத்தை-கச்சை தொண்டை நாட்டுத் தமிழ்ச் சொல் வழக்கு மாறுதல்கள்

நெல்லின் பக்கத்தில் நின்றது-நெல்லுக்கா நின்றது வீட்டின் பக்கத்தில் நின்றது-வீட்டுக்கா நின்றது இவற்றைத் தொண்டை நாட்டு வழக்குகளாய்க் குறிப் பிடுவர். .

இவையேயன்றிப் பொதுவகையாய்ச் சில பேச்சு வழக்கு களையும் குறிப்பிடுவர்.

இவனைப் பார்க்க-இவனைப் பாக்க

ஈங்கு-இங்காக்க