பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183

சிறப்பாகச் சுட்டுப் பெயர்களும், மூவிடப் பெயர்களும் இத் தகைய மாற்றங்களைப் பெற்றுள்ளன.

அதனை-தானி அவன்-வாடு; இவன்-வீடு யான் -அன்-நா நம்-மன

. (6) தமிழில் புகுந்த வடசொற்கள் பெரிதும் உருமாறி மருவி வழங்குகின்றன. தமிழின் தொன்மைக்கு இதுவும் ஒரு சான்றாகும்.

‘(7) கன்னடப் பகுதியிலும், தெலுங்குப் பகுதியிலும் கல்வெட்டுச் செய்திகள் சமஸ்கிருதத்தில் விளங்கத் தமிழ் நாட்டுப் பழங்கல்வெட்டுகளில் அவை தமிழில் வரையப் பெற்றுள்ளன.

தமிழ் உயர்தனிச் செம்மொழியாக விளங்குவதோடு, தொன்மை மிக்க வழக்காறு பெற்ற மொழியாகவும் விளங்கு கிறது என்பது இவற்றால் புலனுகிறது. மேலும் பிறமொழித் தாக்குதல் குறைவாகவும், தொடர்ந்த இலக்கிய வழக்காறு பெற்றதாகவும் இது வழங்கி மொழி ஆராய்ச்சிக்கு மிகவும் உதவுகிறது; திராவிட இன மொழிகளின் தொல்வடிவங்களைக் காட்டும் பொதிப் பொருளாகவும் திகழ்கிறது.