பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. திராவிட மொழிகளும் வடமொழிகளும்

திராவிட மொழிகள் வடமொழியினின்றும் முற்றிலும் வேறுபட்டவை என்பதற்குக் கால்டுவெல் கீழ்வரும் காரணங் களைக் குறிப்பிடுகிருt.

(1) தமிழ் மொழியில் இயற் சொற்களே மிகுதியாக வழங்குகின்றன: வடசொற்களோ மிகவும் குறைவு.

‘() மொழிக்கு அடிப்படையான மூவிடப் பெயர்கள், எண்ணுப் பெயர்கள், பெயரி வினைகள், கால விகுதிகள் தொடர் அமைப்பு முறைகள் முதலியவற்றால் தமிழ் வடமொழியோடு முற்றிலும் வேறுபட்டு இயங்குகின்றது.

(3) தன்னெடு கலந்துவிட்ட பிறமொழிச் சொற்களைப் பிரித்து,அவற்றைத் திசைச் சொற்கள் எனவும் வடசொற்கள், எனவும் வேறுபடுத்தி ஒதுக்கி வந்துள்ளது.

(4) தமிழ் மக்கள் பேச்சு வழக்கிலும், கவிஞர்களின் செய்யுள் வழக்கிலும் வடசொற்கள் மிகக் குறைவாக வழங்கி வருகின்றன. .

(5) திராவிட அடிப்படைச் சொற்களும், அவற்றின் அடிச்சொற்களும் வடமொழிச் சொற்களோடு முற்றிலும் மாறுபட்டு இயங்குகின்றன. -

(6) இலக்கண அமைப்பிலும் திராவிட மொழிகளும், வடமொழியும் முற்றிலும் வேறுபட்டியங்குகின்றன.