பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185

அடிப்படை இலக்கண வேறுபாடுகள்

‘(1) திராவிட மொழிகளில் பொருள் நோக்கில் திணை பால், பாகுபாடுகள் அமைந்துள்ளன. சொல் நோக்கில் வடமொழியில் திணை, பால் பாகுபாடு அமைந்துள்ளது.

(2) திராவிட மொழிகளில் பெயர்ச்சொற்கள் பன்மை விகுதிகளை ஏற்ற பிறகே வேற்றுமை உருபுகளை ஏற்கும். வடமொழியில் இதற்கு மாறுபட்ட முறையே உள்ளது ஆண்டு ஒருமைக்கும், பன்மைக்கும் தனித்தனி வேற்றுமை முடிபுகள் கூறப்படுகின்றன. -

தமிழில் வேற்றுமை உருபுகள் எளிதில் பிரித்தறியும் வகையில் பெயர்ச்சொற்களோடு ஒட்டு நிலையாகச் சேர்ந் துள்ளன. -

‘(3) திராவிட அஃறிணைப் பெயர்களில் பெரும்பாலும் ஒருமை பன்மை வேறுபாடில்லை. ஒருமை வடிவே பன்மைக்கும் வழங்குகிறது.

(4) நான்கன் உருபுகளாகிய கு கி, அல்லது கெ (go) வடமொழி உருபுகளோடு ஒத்தமையாது சித்திய மொழி யோடு ஒத்தியங்குகிறது.

/ (ச) வடமொழியில் இலக்கண உருபுகள் முந்து நிலை களாக (prepositions) அமையத் திராவிட மொழிகளில் பிந்து s5%vaststen (poot positiono) aaoub6)cirspaw.

1 (6) வடமொழியில் பெயரடைக்கும், பெயருக்கும் திணை, பால் இயைபு உண்டு. இவ்வியைபு திராவிட மொழிகளில் இல்லை.

அசிசா லட்கா; அச்சி லட்கி (இந்தியும் வடமொழி அமைப்பினதே) நல்ல பையன்; நல்ல பெண் நல்ல மாடு