பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193

சில சொற்கள் பெயரையோ, வினையையோ சார்ந்து நின்று சூழ்நிலைக் கேற்பப் பொருள் உணர்த்த வல்லன.

தில், மன், கொல், உம், ஏ முதலாய இடைச்சொற்களும்: பகுதி ஒழிந்த பகுபத உறுப்புகளும் (இடைநிலை, சந்தி, சாரியை, விகுதி), வேற்றுமை, உவமை, பண்பு முதலாய வற்றின் உருபுகளும், இசைநிறை, அசைநிலை போன்றவையும் அத் திறத்தனவாகும்.

தமக்கென அவற்றிற்குப் பொருள் இல்லை. உரிச் சொற்களுக்குத் தமக்கெனப் பொருள் இருப்பினும் தனித்து நின்று பொருள் உண்ர்த்தின் பயன் விளைவதில்லை.

இடுகுறி. காரணம்

சொற்கள் இடுகுறியானும், காரணத்தானும் பொரு ளுணர்த்துவன. சொல்லுக்கும், பொருளுக்கும் தொடர் பிருக்க வேண்டும் என்ற நியதியில்லை. தொல்காப்பியரும் மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா என்பர்.

உரிச்சொற்களுக்கு இலக்கணங் கூறுங்கால் தொல்காப் பியர் இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றி எனக் குறிப்பிடுகின்றார். இதல்ை, சொற்கள் இசையானும், சில குறிப்புகளானும், பண்புகளானும் தோன்றியிருக்கலாம் எனக் கருதலாம். இரட்டைக் கிளவி ஒலிக் குறிப்பாலும், பண்பு குறிப்பாலும் பொருள் தருகிறது.

மரபும் ஆக்கமும்

குறிப்பிட்ட சொற்கள் குறிப்பிட்ட பொருள்களையே தொன்றுதொட்டு உணர்த்தி வருகின்றன. அவை மரபு சொற்கள் என வழங்குகின்றன. சில பொருள்களை உணர்த்து தற்கு மரபு சொற்கள் இல்லாத போது புதிய சொற்கள் படைக்கப்படுகின்றன. அவை ஆக்கச் சொற்கள் என வழங்கு கின்றன. -

13