பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

ஒரு பொருளும் பல பொருளும்

ஒரு சொல் பல பொருளையும் தருதல் உண்டு. திச்ைச் சொற்கள் பல, மொழிக்கண் புகுவது இதற்குக் காரணமாகும். பலபொருள் ஒருசொல் பொருள் தரல்

பல பொருள்களை உணர்த்தும் சொற்கள் வினையாலும், இனத்தாலும், சார்பாலும் பொதுமை நீங்கிக் குறித்த பொருளை உணர்த்தும்.

மாப் பூத்தது-வினையால் மரத்தை உணர்த்திற்று. மாவும் மருதும் ஓங்கின-இனத்தால் மா என்பது மரத்தை உணர்த்திற்று.

கவசம் புக்கு நின்று “மாக்கொணு’ என்ற வழிச் சார்பால் மா குதிரையை உணர்த்திற்று. வழக்கு வேறுபடல்

உவன், உது, உவ்விடம் என இன்றும் ஈழ நாட்டில் வழங்குகின்றன. இவை தமிழ் நாட்டில் வழக்கிழந்து விட்டன. .

மேலும்கொடு எனும் பொருளில் சென்னையில் வழங்கும் ‘கொசுறு’ எனும் சொல் தமிழ் நாட்டில் பிற பகுதிகளில் வழங் குவதில்லை. தேங்காயின் மேலோட்டை வடஆர்க்காடு மாவட்டத்தார் கொட்டாங் குச்சி என வழங்குகின்றனர். அதனையே கோவை மக்கள் தொட்டி என்கின்றனர்.

ஈழத்தில் நுளம்பு’ எனும் சொல் கொசுவைக் குறிக்க வழங்குகிறது. தமிழகத்தில் அவ் வழக்கில்லை. -

புத்தகத்தின் அட்டையை மட்டை எனலும்,அவதானித் தல், கதைத்தல் முதலியனவும் ஈழநாட்டு வழக்குகளாகும். காலமும் இடமும், - - -

சொற்கள் இடந்தோறும் வேறுபடல் மிகக் குறைந்த வழக்கே காலந்தோறும் வேறுபடல் பெருவழக்காகும்.