பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195

சிறப்புப் பொருட்பேறு

பல பொருள்களுக்கும் பொதுவாக வழங்கும் ஒரு சொல் காலப்போக்கில் ஒரு பொருளையே குறித்தல் உண்டு. அதனைச் சிறப்புப் பொருட் பேறு என்பர்.

பொன், இழவு, புல், நெய் என்பன முதலில் பல பொருள் களுக்குப் பொதுவாக வழங்கிப் பின் ஒரு பொருளுக்கே உரிமை யாகிவிட்டன.

பொதுப் பொருட்பேறு

முதலில் சிறப்புச் சொற்களாய் நின்று குறிப்பிட்ட பொருளை உணர்த்தி வந்த சொற்கள் காலப் போக்கில் பல பொருளை உணர்த்திப் பொதுச் சொற்களாதலும் உண்டு. அவற்றைப் பொதுப் பொருட்பேறு என்பர்.

எண்ணெய், மரம், மரக்கால், கறி என்பன முதலில் குறிப்பிட்ட பொருள்களை உணர்த்திப் பின் பல பொருள் களுக்குப் பொதுவாக நிற்கும் சொற்களாகி விட்டன.

எள்ளிலிருந்து எடுக்கப்படுவது எனும் பொருள்படும் எண்ணெய் என்பது இன்று எல்லா நெய்களையும் (Oil) உணர்த்துகின்றது. அகக்காழ் உடையன மரம், புறக்காழ் உடையன புல் என்பர் தொல்காப்பியர். இன்று மரம் என்பது தென்னை, பனை முதலியவற்றையும் குறிக்கிறது.

கறி என்பது மிளகிட்ட கறியை உணர்த்தி நின்று இன்று மிளகிடாத கறியையும் உணர்த்துகிறது. மரத்தால் செய்த “மரக்கால்’ எனும் அளவு கருவி இன்று பிறவற்றுக்கும் பெயராகிவிட்டது. உயர் பொருட்பேறு: பிள்ளை, பார்ப்பு, களிப்பு

கீரிப்பிள்ளை, அணிப்பிள்ளை என அஃறிணைக்கு வழங்கிய பிள்ளை என்பது மக்கள் குழந்தைகளுக்கு வழங்கி இன்று மக்கள் சாதிப் பெயராய் உயர்ந்துவிட்டது.