பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

பறவைக் குஞ்சுகளைக் குறிக்கும் பார்ப்பு என்பது இன்று பாப்பா என மக்கள் குழந்தைகளை உணர்த்துகிறது. சிலருக்கு இயற்பெயராகவும் வழங்குகிறது.

கள்ளுண்டு களித்தலுக்கு வழங்கிய களிப்பு என்பது இன்று உவகை நிலையை உணர்த்துகிறது.

இழி பொருட் பேறு

மணம் எனும் பொருள் தரும் நாற்றம், குவியல் எனும்

பொருள்படும் குப்பை முதலாய சொற்கள் இன்று இழி

பொருட் பேருகிவிட்டன.

நுண்பொருட்பேறு

தலை, அரை, கால், நோக்கம், சூழ்ச்சி, பார்வை முதலாய

பருமையை உணர்த்திய சொற்கள் இன்று நுண் கருத்துகளை

உணர்த்துகின்றன.

பருப்பொருட்பேறு . அகம், புறம், விருந்து, வறுவல், முறுக்கு, பகை முதலாய

நுண் பொருட் சொற்கள் இன்று பருப்பொருள்களை உணர்த்து

கின்றன. இம் மாற்றத்தைப்

“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல

கால வகையி ேைன’

என்பார் நன்னூலார்.