பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

உரத்தையும், தலையையும் இடமாகக் கொண்டு பிறக்கும் எனக் கூறுகிறது. - -

(4) பதவியல் என்பது நன்னூலாரே புகுத்திக்கொண்ட ஒன்று. அது பண்பு சொற்க்ளின் மாற்று வடிவங்களையும், ஒலித் திரிபுகளையும் விரித்தோதுகிறது.

(5) தொல்காப்பியம் ஈறுதோறும் தனித்தனியே கூறும் பல புணர்ச்சி விதிகளையும், சில சிறப்பு விதிகளையும் நன்லூல் தொகுத்துக் கூறுகின்றது.

(6) கள் என்பது அஃறிணைக்கே உரியதெனத் தொல்காப் பியர் கூற, உயர்திணைக்கும் உரியதென நன்னூல் நவில்கிறது.

(7) மூவிடப் பெயர்களுள் தன்மைப் பெயராக யான் என்பதனை மட்டுமே தொல்காப்பியம் கூற, நான் எனும் புது வடிவு ஒன்றனையும் நன்னூல் சேர்த்தோதுகிறது.

(8) வேற்றுமை உருபுகளுள் மூன்றன் உருபுகளாக ஒடு, ஆன் என்பனவற்றைத் தொல்காப்பியம் கூற நன்னூல் அவற் ருேடு ஒடு, ஆல், உடன் என்பனவற்றையும் சேர்த்தோது கிறது.

இன் ஒன்றனயே ஐந்தன் உருபெனத் தொல்காப்பியம் கூற, நன்னூல் அதனேடு இல் என்பதனையும் சேர்த்துக் கூறுகிறது.

அது ஒன்றனையே ஆறன் உருபாகத் தொல்காப்பியம் கூற, நன்னூல் அதைேடு ஆது என்பதனையும் சேர்த்து அவ் விரண்டும் ஒருமைக்குரியன எனவும், அ என்பது பன்மைக் குரித்தெனவும் கூறுகிறது.

கண் ஒன்ற்னையே ஏழன் உருபெனக் குறிப்பிட்டுக் கால், புறம், அகம் முதலாயவற்றை அதற்கு அண்மைச் சொற்க ளாகத் தொல்காப்பியம் கூற, நன்னூல் கண், கால், புறம், அகம் முதலாய அனைத்தையும் உருபெனவே விதந்தோது கிறது.