பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199

/(9) தொல்காப்பியம் தொடரியலுக்கும், சொல்லிய லுக்கும் தனித் தனியே சிறப்பிட்ம் தந்து, கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமர்பு, எச்ச வியல் என்பவற்றல் தொடரியலையும், ஏனைய பெயரியல், வினையியல், இடையியல், உரியியல்களால் சொல்லியலையும் எடுத்தோத, நன்னூல் சொல்லியலுக்கே சிறப்பிடந் தந்து அதனையே ஐந்தியல்களால் ஒதுகிறது. பொதுவியலால் தொடரியலைச் சிறிதளவு விதந்தோதுகிறது.

(10) தன்மைப்பன்மை வினைகள் உயர்திணைக்கே உரியன என்பார் தொல்காப்பியர். இருதிணைக்கும் உரியன என்பார் நன்னூலார்.

‘(11) வியங்கோள் வினை படர்க்கைக்கு மட்டுமே உரிய தென்பார் தொல்காப்பியர். மூவிடத்திற்கும் உரியதென்பார் நன்னூலார். - -

(12) வியங்கோள் விகுதிகளைத் தொல்காப்பியம் விதந் தோதவில்லை. நன்னூல் விதந்துரைக்கிறது.

  • (13) பெயரெச்ச வாய்பாடுகளாகச் செய்த, செய்யும் எனும் இரண்டனை மட்டும் தொல்காப்பியம் கூற நன்னூல் செய்கின்ற என்பதனையும் சேர்த்துக் கூறுகிறது.

‘(14) வினையெச்ச வாய்பாடுகளுள் செய்யா, செய்வான் செய்பர்ன், செய்பாக்கு என்பனவற்றை நன்னூல் புதியன வாகச் சேர்த்துள்ளது. - -

(15) செய்கு என்னும் வாய்பாடு வினையொடு முடியினும் முற்றாகவே கருதப்படும் என்பார் தொல்காப்பியர். நன்னூல் செய்கும் என்பதையும் உடன் சேர்த்துக் கூறுகிறது.

‘(16) செய்து செய்யூ, செப்பு செய்தென செய்யியர், செய்யிய, செயின், செய, செயற்கு எனும் ஒன்பதும் வினை யெச்ச வாய்பாடுகளெனத் தொல்காப்பியம் கூறுகிறது.

- இவற்றுள் செயற்கு எனும் வாய்பாடு நன்னூலில் இடம் பெறவில்லை.