பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{00

“(17) பின், முன், கால், கடை, ழிை, இடத்து, எனும் விகுதி பெற்ற வாய்பாடுகளைக் காலங் கன்னிய விண்யெச்சக் கிளவிகளாகத் தொல்காப்பியம் கூறுகிறது. இந் நுட்பத்தை நன்னூல் காட்டவில்லை. - -

(18) நன்னூல் கால எழுத்துகளைத் தெளிவாகக் கூறு கிறது. தொல்காப்பியம் வாய்பாடுகள்ால் குறிப்பாக உணர்த்துகிறது. செய்து, செய்யும் என்பவை முறையே இறந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் காட்டுதல் மட்டும் குறிப்பிடுகிறது. -

‘(19) தொகைநிலைத் தொடர்களுள் அன்மொழித் தொகை, பண்பு, உம்மை, வேற்றுமை எனும் மூன்று தொகை நிலைத் தொடர்களினடியாகத் தோன்றும் எனத் தொல்காப் பியம் கூறுகிறது. உவமை, வினைத் தொகை எனுமிரண்டனை யும் சேர்த்து, ஐந்தொகை மொழிமேல் பிறதொகல் அன் மொழி எனக் கூறுகிறது நன்னூல்.