பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. மொழிக் கலப்பு

வடமொழி தமிழகத்தில் கால் ஊன்றிய போதினும் தமிழோடு முற்றிலும் கலந்து அதனை மாற்றும் ஆற்றல் அது பெறவில்லை. புலவர்கள் வடசொற்களைப் புகுத்த முயன்ற போதெல்லாம் . அதற்கு எதிர்ப்புத் தோன்றிக்கொண்டே இருந்தது.

பிற மொழிச் சொற்களைத் தமிழ் ஏற்கும் பொழுது அவற் றின் ஒலியியல்பைத் தம்மியல்புக்கு ஏற்றவாறு மாற்றிய்ே ஏற்றுக்கொண்ட்து: -

“வடசொற் கிளவி வடஎழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என்பது தொல்காப்பியம். வட்சொற்கள் புகுந்தன வாயினும் வடமொழியின் ஒலிகள் தமிழில் இடம் பெறவில்லை. சில ஒலிகளை எழுதிக்காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டதால் ஹ, ஷ, ஸ, ஜ முதலாய ஒலிகளையும், அவற்றுக்குரிய எழுத்து களையும் தமிழ் ஏற்றுள்ளது.

தொல்காப்பியர் காலத்தில் சில வட சொற்களே தமிழ் மொழியில் இடம்பெற்றன. காலம், உலகம்’ என்பனவற்றை வடசொற்கள் என்பாரும் உளர். அவை தமிழ்ச் சொற்களே. சங்க காலத்தில் இமயம், கங்கை, வாரணவாசி, பாடலி புத்திரம் முதலிய ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவையேயன்றி யவனர் என்ற புதிய சொல்லும் புகுந்துளது. புறநானூற்றிலும் சில வடசொற்கள் புகுந்துள்ளன.