பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

சங்க இலக்கியங்களுள், காலத்தால் பிற்பட்ட நூல்க ளாகிய கலித்தொகையிலும், பரிபாடலிலும், திருக்குறள் மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய நூல்களிலும் வட சொற்கள் மிகுதியாகக் கலந்துள்ளன. எனினும், அவை தமிழ் ஒலிகளைப் பெற்றுத் தமிழ்ச் சொற்களாகிவிட்டன. சமய ஞான மும், தத்துவ விசாரணைகளும் பெருகிய காரணத்தால் இந் நூல்களில் வடசொற்கள் இடம்பெற்றன.

/ இடைக் காலத்தில் (14, 15ஆம் நூற்றாண்டுகளில்) மணிப் பிரவாள நடை என்ப தொன்று எழுந்தது. அது தமிழ் வாக்கிய அமைப்பையும், வடமொழியும் தமிழும் இணையாகக் கலந்த சொற்கலப்பையும் கொண்ட நடையாகும். மணியும், பவளமும் கலந்தமைந்த மாலை போல அஃது அழகு பயப்ப தெனக் கருதினர். ரீ புராணம் எனும் சைன நூல் இக் கலப்பு நடையால் எழுதப்பட்டதே. -

வைணவ உரையாசிரியர்களும் இம் மணிப் பிரவாள நடையைக் கையாண்டு உரை நடையில் வடமொழிச் சொற்களை மிகுதியாகக் கலந்தனர்.

வடமொழி நூல்களை வலியக் கற்றதால்தான் சங்க காலத் தில் வடசொற்கள் தமிழில் புகுந்தன என்பதைவிடப் பேச்சு வழக்காகிய பிராகிருத மொழிவாயிலாகவே புகுந்தன என்பது பொருந்துவதாகும். -

பல்லவரும், பிற்காலச் சோழர்களும் வடமொழிக்கும், வடமொழி நூல்களுக்கும் ஆக்க மளித்தனர். அதனல், வட நூற்பயிற்சி மிகுதியாயிற்று. -

பல சொற்கள், நேரே வடமொழியினின்றும், அதன் சிதைவு மொழியாகிய பிராகிருதப் பேச்சு மொழியினின்றும் திரிந்து தமிழ்க்கண் புகுந்துள்ளன. பல்லவர் காலத்தில் பல சொற்கள் பிராகிருதம் வாயிலாகப் புகுந்தன என்பர்.

விஞ்ஞாபனம் என்பது நேரே புகுந்த வடசொல் என வி. கோ. சூ. காட்டுவார். பல்லவர் காலத்தில் புகுந்த சொற்