பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

களாகப் பருப்பதம், பரமேச்சுரன், நட்டம், விண்ணப்பம் முதலியவை காட்டப்படுகின்றன. -

சோழர் காலத்தில் வடமொழி இலக்கியங்கள் மிகுதி யாகப் பயிலப்பட்டன. அதனல், இலக்கியச் சொற்கள் நேரே தமிழில் புகுந்தன; சில சொற்கள் திரிபு பெருமலேயே புகுந்தன. இராசராசன், குலோத்துங்கன், விசயாலயன் முதலியவை வடசொற்களே. -

வடமொழி வழக்காறுகள்

வடசொல்லும், எழுத்தும் புகுந்ததோடு இலக்கிய இலக் கண வழக்காறுகள் சிலவும் புகுந்துவிட்டன. சேவிைரையர் வடமொழிப் போக்கை ஒட்டியே தொல்காப்பியத்திற்கு உரை வகுத்துள்ளார். பதவியல் என்ற தனியியலையே வடமொழி இலக்கணத்தை ஒட்டி நன்னூலார் புகுத்தியுள்ளார். திருக் குறள் உரையில் பரிமேலழகர் பல வடமொழி வழக்குகளைப் புகுத்தியுள்ளார். தண்டியலங்காரம் வடமொழிப் போக்கைத் தழுவி அணி வகைகளை விரிவுபடக் கூறுகிறது.

பிறமொழிக் கலப்பு

‘ கீழ் வருபவை வேத காலத்திலேயே வடமொழியில் அமைந்துவிட்ட சொற்கள் என்பர்.

தமிழ் απαφα வடமொழி பழம் * Phala மயில் — மயூர களம் — Khala வில் (வன்மை) - t_J6) :

கைதை * கைதகா ஏலம் *E* ஏலா, பல்லி - பல்லீ புற்று *E= புத்திகா

மயில் எனும் தமிழ்ச் சொல்லே வடமொழியில் மயூரம் எனப் புகுத்திருக்க வேண்டும். மய்-மயிர்-மஞ்ஞை எனத்