பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305

சாவகர், சாரணர், தானம், தருமம், ஞானம், விஞ்சை,

இய்க்கி, இந்திரன், அந்தி முதலியன சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளமையை எடுத்துக் காட்டுவர்.

தருமம், பாவனை, கந்தம், நரகர், அநித்தம், துக்கம், முதலிய சொற்கள் மணிமேகலையில் வந்துள்ளன என்பர்.”

ஆதி, பகவன், பாக்கியம் என்பன திருக்குறளில் இடம் பெற்றுள்ளன.

வழுதுணங்காய், தவளைக் காய், மீசை முதலிய சொற்கள் முண்டா மொழியிலிருந்து தமிழில் புகுந்துள்ளன. நீர் என்னும் சொல் தேங்காய் என்ற பொருளில் முண்டா மொழி யில் வழங்குகிறது. அதனல், இளநீர் என்பதில் நீர் என்னும் சொல் முண்டா மொழியினது என்பர்.

கீழைத் தீவுகளிலிருந்து பல நறுமணப் பொருள்கள் நம் நாட்டில் புகுந்தன. அவற்றுள் தக்கோலி, அருமணவன் முதலியவற்றை அடியார்க்கு நல்லார் காட்டுவர்.

முருங்கை என்பதனைச் சிங்களச் சொல் என்பர். படகு வகையைச் சார்ந்த சம்பான் என்னும் சொல்லும், பெரிய மண் கலத்தைக் குறிக்கும் காங்கு என்னும் சொல்லும், பீங்கான்’ என்னும் சொல்லும் சீன நாட்டிலிருந்து வந்தவை என்பர்: -

மத்திகை, சுருங்கை, கன்னல், ஒரை என்பனவற்றைக் கிரேக்க மொழிச் சொற்கள் என்பர்.”

தபா (முறை), ரஜா. இமாம், இலாகா, பிஸ்மில்லா, உருசு, காயம் (உறுதி), ஜேப்பி, சைத்தான், தகவல், தாக்கிது,

1. gp so -பக். 173

3. go -பக். 173 8. தமிழும் பிற பண்பாடும் -பக். 76 4. தமிழும் பிற பண்பாடும் தெ.பொ. மீ.-பக். 36

5. 3:) பக். 76