பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

தவாலி, நகாரா, மக்கர், மால் (மகால்) முதலியவற்றை அராபி யச் சொற்கள் என்பர்.

சிப்பந்தி, தாவாலி, தம்பிடித்தல, தர்க்கா, நாஸ்தா, மஜா, மாலீசு, மோரா, லங்கர், லுங்கி, சாக்கு, ஜமுக்காளம், ஜன்னல், சால் (வை), ஜோக்கு, சர்க்கார், சுமார் என்பன வற்றைப் பாரசீகச் சொற்கள் என்பர்.

அக்கப்போர், அக்ரகாரம், அக்கு, அசல், ஆசாமி, அண்டா அணு, அபினி, அம்பர், அம்பாரம், அம்பாரி, அமுல், அலக்கலக்கா, அலாதி, அமீன், இந்துஸ்தான், ராஜி, ராஜினமா. ராட்டினம், ராத்தல், லங்கோடு, இனம், ருஜு. ஊதா, ஊதுவத்தி, ஐவேஜி, அவுட்டு, அச்சா, கச்சேரி, கஜான, கசகசா, கசாப்பு, கெடுபிடி, கப்பி, கம்மி, கைலி, கிராக்கி, கருர், கலாய், காப்பிரி, காய்லா, காலி, கீல், குடுத் துணி, குத்தகை, குலாம், சந்தா, சப்பரம், சர்க்கா, சராசரி, சாமான் முதலியவற்றை உருது மொழிச் சொற்கள் என்பர்.”

முகமதியர்களுக்குப் பின் வந்த டச்சுக்காரர் வழியாகக் கக்கூஸ், துட்டு, பம்பளிமாஸ் முதலிய சொற்கள் தமிழில் புகுந்தன என்பர். -

பதினைந்தாம் நூற்றாண்டில் முதன் முதலாகத் தமிழ் நாட்டில் புகுந்த போர்ச்சுகீசியரைக் குறிக்கும் பறங்கி என்னும் சொல்லை அடையாகக் கொண்டு பல சொற்கள் அமைந்துள்ளன. பறங்கிக்காய், பறங்கிச்சக்கை, பறங்கிப் பேட்டை, பறங்கிமலை முதலியன அத் தகையவை என்பர்.”

அலமாரி, கோப்பை, ஜன்னி, அன்னசி, கடுதாசி, அல்பனத்தி, கிராதி, கொரடா, த்ராவி, பாதிரி. பீப்பாய்,

1. go . பக். 77 2. தமிழும் பிற பண்பாடும்- பக்.78 3. o பக். 78