பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207

மேசை, மேஸ்திரி, வராந்தா முதலியனவும் போர்த்துகீசியச் சொற்களே என்பர்.”

போர்த்துகீசியருக்குப் பின்வந்த பிரஞ்சுக்காரர்களால் ஆசு (Ace), குசினி, பீரோ, லாந்தர் முதலாய சொற்கள் புகுந்தன என்பர்.

தமிழ்க்கண் புகுந்த ஆங்கிலச் சொற்களுக்கு அளவே இல்லை. -

உயில், ஏக்கர், காப்பி, கொக்கோ, கோர்ட்டு, சம்மன், சவரன், சிமிட்டி, சினிமா, டிக்கெட், நம்பர், பாங்க், பேப்பர், லீவு. அமீன. அவற்றுள் கு றிப்பிடத் தக்கன.

மராத்தியர் தஞ்சையில் ஆண்டமையால் உணவு வகைச் சொற்கள் பல புகுந்தன.

அட்டவணை, கைலாகு, கச்சாயம், அபாண்டம், காமாட்டி, கில்லாடி, குண்டான், கேசரிபாத், கோசும்பரி, சாம்பார், சவுக்கார், சாவடி, சேமியா, பட்டாணி, பேட்டை, லாவணி, ரசவாங்கி, வில்லங்கம், ஸொஜ்ஜி முதலியன அவற்றுள் குறிப் பிடத் தக்கன. .

அட்டிகை, இதா, எகத்தாளம், எட்டன், சமாளித்தல், சொத்து, பட்டாக்கத்தி, பம்பு, (மூங்கில்), பித்தலாட்டம் முதலியவற்றைக் கன்னடச் சொற்கள் என்பர்.”

அக்கடா, ரெட்டி, ரவிக்கை, லஞ்சம், உப்பசம், கட்டடம், கட்டப்பாறை, கந்தை, கண்ணராவி, கபோதி, கம்பத்தம், கலப்படம், குப்பம், கெடுவு, கொலுசு, சந்தடி, சலவை, ஜளிப்பு, சிட்டிகை, சிமிளி, உருண்டை, சொக்கா, தடவை, திப்பி, திமிசு, தும்பு, தெப்பல் (அடி), தோத்தி (வேட்டி), நீச்சு, (மீன் நாற்றம்), பட்டறை, பலப்பம், பவிசு, பால்மாறு

1. to so go u: 79

2. பக். 79