பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

தல், போல் (உள்ளீடு இன்மை), வெல்தி, ஜாஸ்தி, சந்து, சுளுவு முதலியவற்றைத் தெலுங்கு சொற்கள் என்பர்.

பழங்காலத்தில் வடசொற்களும், இடைக் காலத்தில் இந்துஸ்தானிசி சொற்களும் புகுந்தமை போலத் தற்காலத் திலும் கற்றாேர் பேச்சிலும், கலை, விஞ்ஞானக் கருத்துகளிலும் ஆங்கிலச் சொற்கள் மிகுதியாகக் கலந்துள்ளன. மேல் நாட்டு நாகரிகமும், விஞ்ஞானப் பொருள் சிந்தனையும் பெருகிவிட்ட காரணத்தால் இவ்வாறு புகுதலைத் தவிர்க்க முடியவில்லை. பாமர மக்கள் பேச்சிலும் சில ஆங்கிலத் திரிபு சொற்கள் இடம் பெறுகின்றன. இக் காலத் தமிழ் உரைநடையே ஆங்கிலப் போக்கை ஒட்டி வளர்ந்துள்ளது எனில் அது மிகை பாகாது. உரைநடை வளர்ச்சிக்கு ஆங்கிலம் மிகுதியாக உதவியுள்ளது. ஆங்கிலம் கற்றவர்கள் தமிழில் எழுதும் பொழுது, அவர்கள் சிந்தனை ஆங்கில அடிப்படையில் விளங்கு வதால், அச் சாயல் தமிழ் நடையில் படிந்துவிடுகிறது. இது விலக்க முடியாத ஒன்று.