பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

காக்காய் பிடிக்கிருன்: மாமியார் வீடு: கம்பி நீட்டு கிருன்: குல்லாய் போடுகிருன்.

உருவகம், ஆகுபெயர், பிறிது மொழிதல், இடக்க ரடக்கல், குழுஉக்குறி, மங்கலம், தகுதிவழக்கு முதலியன குறிப்பு மொழிகளாக அமைகின்றன.

அவன் சிங்கஏறு-உருவகம் காளை வந்தான்-உவமை ஆகுபெயர் பீலிபெய் சாகாடும் அச்சிறும்-பிறிதுமொழிதல் கால்கழிஇ விருதும்-இடக்கரடக்கல்

தண்ணிர் சாப்பிட்டான்-குழுஉக்குறி செத்தாரைத் துஞ்சினர் என்றல் மங்கல வழக்கு

கொச்சை மொழி

கீழ்த் தர நிலைப் பேச்சைக் கொச்சைமொழி எனலாம். கல்லாதவர் மொழி பெரும்பாலும் கொச்சையாகவே இருக்கும்.மரூஉ முடிபு கொச்சை மொழியன்று.

நான் கட்கி போச்சே-நான் கடைக்குப் போகையில்

என்னத்தான் நெனக்கிறே-என்னதான் நினைக்கிறாய் இவை கொச்சை வழக்குகளாம்.

ஆச்சு, போச்சு மரூஉ முடிபுகளாம். பேச்சு வழக்குத் திரிபுகள்

(1) மரூஉ முடிபுகள், (2) அண்ணமெய்யாதல் (3) பல்லின மாதல் எனும் மூன்றும் பேச்சுவழக்குத் திரிபுகளுள் குறிப் பிடத் தக்கனவாகும். - .

வி. கோ. சூரிய நாராயண சாஸ்தி ரி யார் மரூஉ முடிபுகளைத் தோன்றல், திரிதல், கெடுதல், நீளல், நிலைமாறல் என ஐவிகைப்படுத்திக் காட்டுவர். யாது, யாவது என்றாதல் தோன்றல்; புலைத்தி,புலைச்சி என்றாதல் திரிதல்: இருக்கிறது, இருக்குது என்றாதல் கெடுதல். பெயரன், பேரன்