பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215

சொல்-சொல்லு, கண்ணு-கண் புண்-புண்ணு. மண்-மண்ணு-குறிலொற்று உகரம் பெற்றது.

தெரு-தெருவு, புழு-புழுவு, கரு-கருவு, உரு-உருவு -குறிலிணைப்பதம் உகரம் பெற்றது.

முதன் முதலில் மொழியிறுதி வல்லினம் ஒலிநயச் சேர்க்கையாக உகரம் பெற்றது. தொல்காப்பியர் காலத்தில் உகரமும் அகரமும் சேர்ந்தன. சங்க காலத்தில் இப் போக்குப் பெருகத் தொடங்கிற்று. .

பேர் - யாறு-பேரியாறு: சிறு - யாழ் - சீறியாழ்

முதலாய சொற்களால் இகரமும் ஒலித்துணையாய் வருதல் காணக.

இக் காலத்தில் வல்லினமன்றிப் பிற மொழி இறுதி எழுத்துகளும் தனித்திருந்து,உகரத்தைப் பெற்றுமுடிகின்றன. பாலீறுகளும் சரியாக ஒலிக்கப்படுவதில்லை.

நான்-நாலு

நாம் இரண்டு பேரும்-நாம ரெண்டுபேரும்

அவன்-அவ (இறுதிமெல்லொலி கலந்த உயிர்)