பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

கெவி (கன்)-செவி (தமிழ்)

கெம் (கன்)--செம் (தமிழ்)

தி (கன்)-சீ (தமிழ்)

சீமு (தெலுங்கு). . .

கன்னடம், குடகு, துளு மொழிகளில். ககரம் நிலை பெற்றிருக்கத் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் சகரமாக மாறியுள்ளது. -

சில சொற்களின இடையிலுள்ள ககரம் கெட்டு முதலுயிர் நீளுதலும் உண்டு,

அகப்பை-ஆப்பை

பகல்-பால்

பகுதி-பாதி

மிகுதி-மீதி

புகுநது-பூநது

துகள-துள்ள

மகன்-மான்

பெருமகன்-பெருமான்

சோழர்,பல்லவர் கல்வெட்டுகளில் ககர,யகர மாற்றங் கள் காணப்படுகின்றன.

இகல்-இயல்.(சோழர் கல்வெட்டு)

வைகாசி-வையாசி (பல்லவர், முற்காலச் சோழர்

- கல்வெட்டுகள்) -

கன்னிகள்-கன்னியள் (பிற்காலச் சோழர்) : சகரம் . . - தென் திராவிட மொழிகளில் மொழி முதலில் சகரம் கெடுதலும் உண்டு; கெடாத இடங்களில் தகரமாக மாறுகிறது.

சழல் (பழந்திராவிடம்)-அழல்; தழல்-(தமிழ்)

சேர் (கொலாமி)-ஏர் (தமிழ்) ?

தெல்காப்பியர் காலத்தில் சகரம் அகரமோடு மொழி முதலில் வருதல் இல்லை. சங்க காலத்தில் சமம் என வழங்கியுள்ளது (புறம் 1519). -

சில சொற்களில் யகரம் வரவேண்டிய இடத்துச் சகரம் வந்துள்ளது. -

குயவர்-குசவர் (சோழர் கல்வெட்டு கி. பி. 1060)

117 . .C. D. P .1 2. C. D. P. – Lu&. 117 3. C. D. P. – Lusk. 106