பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

இணைமெய்யொலிகள்

தொல்காப்பியர் போலும் என்பது மருவி போன்ம் எனத் திரிபு பெற்றதைக் குறிப்பிடுகிறர். சங்க காலத்தில் இத் தகைய இணை மெய்கள் மேலும் இடம் பெற்றன.

மருண்ம், கேண்ம், சென்ம்!

3. சொல்கிலையில் மாறுதல்கள் தன்மைச் சொற்கள்

(1) மூவிடப் பெயர்களுள் தொல்காப்பியர் குறிப் பிடும் தன்மைப் பெயர்கள் யான் (என்), யாம் (எம்), நாம் (நம்) என்பன. பிற்கால நான் என்பது புதிய வடிவமாகும். இது பரிபாடலிலும், சிலப்பதிகாரத்திலும், மணிமேகலை யிலும் இடம்பெறுகிறது. நன்னூல் இதனையும் குறிப்பிடு கிறது.* - * “ - -

(2) யகரம் மொழிமுதற் கண் அகரத்தோடு வருத லில்லை எனும் நியதி பற்றியே யான் என்பது யன் என ஆகாமல் என் என்றாகியது. இது தென் திராவிட மொழி யியல்பாகும்.

(3) தெலுங்கு, மத்திய திராவிட மொழியாகலின் அனக்கு என்பது ஒலி இடம் பெயர்ந்து ‘நாக்கு என அமைந்துள்ளது.”

(4) நீ என்பது ஒருமை வடிவமாயினும் நின் என் பதை நோக்கும் போது நீன் என்பதே தொல்வடிவமாக இருந்திருக்க வேண்டும் எனக் கருதவேண்டியுள்ளது.

(5) யாம் என்பதன் ஒலி இடம் பெயர்ந்த வடிவமே தெலுங்கு மா என்பது. அஃது எம் என்னும் பொருளது.*

1. A History of the Tamil Language—L. 108 2. D. N.–L. 176

3. D. N.–Lu. 179 4. D. N. – Ludt. 179