பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

நூருயிரம் என்பவற்றைத் தொல்காப்பியர் பேரெண் களாகக் குறிப்பிடுகிரு.ர்.

(1) ஆம்பல், தாமரை, வெள்ளம் என்பன அவர் காலத்தில் மிகுதியைக் காட்டும் எண்ணுப் பெயர்களாக வழங்கின.

(2) ஒரு, ஒர் என்பன இரு. ஈர் என்பனவற்றை ஒட்டி ஒப்புமை யாக்கத்தால் அமைந்தவை என்பர்.’

(3) இரண (நற். 123/10) என்பது இணயைக் குறிக் கும் சொல்லாகும். இதுவே இரண்டு என்பதன் பகுதியாய “இரண்’ என்பதாகும்.:

(4) ‘நுப்பது’ என்னும் சொல்வழக்குத் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் வழங்குகிறது. இது நாற்பது என்பதை ஒட்டித் திரிபு பெற்றிருக்க வேண்டும்.

(5) நால்கு’ என்பதே தொல் வடிவமாக இருந்திருக்க வேண்டும். மூன்று, ஐந்து என ஏனைய எண்ணுப் பெயர் களில் மெல்லினமும், வல்லினமும் தொடர்ந்திருத்தலை ஒட்டி இதுவும் ‘நான்கு என மாறியிருக்க வேண்டும்.

(6) ஐந்து, ஆறு என்பன மொழிமுதல் சகரம் கெட்ட வடிவங்கள் என்பர். ‘சய்ந்து’, ‘சாறு என்பனவே முறையே அய்ந்து (ஐந்து), ஆறு என மாறியிருக்க வேண்டும்.”

(1) ஏழ், எழு என்பன நெடில்,குறில் வடிவங்களாகும். பேர், பெரு, கார், கரு என அமைவதைப் போல இவ்விரு வடிவங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். ஏழ் என்பதே பழமையதாக இருந்திருக்கலாம்.

(8) தெலுங்கில் எனிமிதி என்பது தொம்மிதியை ஒட்டி அமைந்த சொல்லாகும். எண் என்பதே எட்டு என்பதன் அடிச் சொல்லாகும்.

1. D. N.-பக். 144

2. D. N.—L. 145

3. D. N.–Li. 156-58