பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231

(9) ஒன்பது, தொம்மிதி (தெலுங்கு), தொண்ணுறு, தொள்ளாயிரம் என்பன ஆய்வுக்குரிய வடிவங்களாகும். ‘தொண்டு என்பதே ஒன்பதைக் குறிக்கும் பழைய சொல்லாகும். தொண்டுபத்து என்பது மருவி ஒன்பதா யிற்று. ஒண்பது என்றிருக்க வேண்டியது ஒன்று என்ப தன் ஒப்புமை யாக்கத்தால் ஒன்ப்தாயிற்று. பத்து என்ப தன் பேரெல்லையைக் கொண்டு ஒன்பது எனக் குறிக்கப் பட்டுள்ளது. தொண்’, ‘தொள்’ என்பனவும் இவ்வாறே அடுத்த பேரெண் எல்லையைக் கொண்டு குறிக்கப்பட்டன வாகும். - -

(10) பதின் என்பது பத்து என்பதன் மற்றாெரு வடிவ மாகும். பதினென்று என்பதில் பதின் உள்ளதைக் காண லாம். பன்னிரண்டு என்பதில் ‘தி கெட்டுப் ‘பன்’ என நின்றது.

(11) நூறு என்பது பழந்திராவிடச் சொல்லே. வந்த என்ற தெலுங்குச் சொல்லும் உள்ளது. வெய்யி, வேலு (1000) என்பது தெலுங்கில் வழங்கும் தனிச் சொற்களா கும். இவற்றின் இனச் சொற்கள் ஏனைய திராவிட மொழி களில் இல்லை, சஹஸ்ரம் என்பதன் திரிபே ஆயிரமாகும். திணைபால் ஈறுகள்

(1) னகர ஈறு ஆண்பாலையும், ளகர ஈறு பெண் பாலை யும், ரகரஈறு பலர்பாலையும் உயர்திணையில் உணர்த்தின. அஃறிணை ஒன்றன்பாலுக்கெனத் தனி வி குதி இல்லை; பலவின்பாலுக்குக் கள் விகுதி இடம்பெற்றுள்ளது.

(2) கள் என்பது முதன்முதலில் மக்கள் என்னும் உயர்திணைச் சொல்லில் இடம் பெற்றுள்ளது. அஃறிணைப் பன்மையிலும் அஃது அருகியே வழங்குகிறது.

மாண்புகள்-தொல். 1098 யாண்டுகன்-புறம். 375/4 அரண்கள்-பதிற். 44/ 13 இயங்கள்-பத்துப்பாட்டு. 10/227