பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. தமிழ் எழுத்து வடிவ வரலாறு

எழுத்து வடிவங்கள் நிலையானவை அல்ல; காலந் தோறும் மாறும் இயல்பின. அச்சு எந்திரம் வந்தபின் எழுத்து வடிவங்கள் நிலைபேறு பெற்றுவிட்டன. ஏடுகளில் எழுதி வந்த காலத்தில் அவை மிகவும் மாற்றமடைந்து வந்தன. தமிழகத்தைப் பொறுத்தவரை எழுத்து வர லாற்றை அறியக்கல்வெட்டுகள் பொதுவாகஉதவுகின்றன.

எழுத்துகள் ஒலிகளுக்கு அறிகுறியாக வழங்குவன. முதன் முதலில் ஒவியங்கள் அறிகுறிகளாக நின்று கருத்து களை விளக்கிவந்தன. பின் அவ் வடிவங்கள் சிதைந்து கருத்துகளுக்கு அறிகுறியாய் நின்றன. நாளடைவில் அவை அசைகளுக்கு அறிகுறியாகிப் பின்னர்த் தனி ஒலி களை விளக்கும் எழுத்துகளாக அமைந்தன என்பர்.

சீன மொழி இன்றும் கருத்துகளுக்கு அறிகுறியாக வடிவங்களையே பெற்றுள்ளன. சீனச் சொற்கள் ஓரசைச் சொற்களாகவே இருத்தலின் அவற்றிற்குரிய வகையில் அவ் வடிவங்கள் அமைந்துவிட்டன. புதிய புதிய கருத்து கள் கூட்டு வடிவங்களால் அமைக்கப்படுகின்றன. அழுகையைக் காட்ட மனிதனும் இருதயமும் எழுத்து களாக அமைகின்றன; உணர்ச்சியைக் காட்ட மனிதனும் கையும் அமைகின்றன. அடிப்படை வடிவங்களோடு துணைக் கோடுகளும் சேர்ந்து கருத்து நுட்பங்களை விளக்கு

கின்றன.