பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237

எதிர்மறை

நன்னூலார் ஆகாரத்தை எதிர்மறைப் பொருளைத் தரும் விகுதியாகக் குறிப்பிடுகிறார். அஃது இடைநிலையாக வும் வந்து எதிர்மறைப் பொருளைத் தருகிறது.

மாட்டேன், மாட்டான் எனும் தன்மை,படர்க்கை எதிர் மறை முற்றுகளிலும், காணுது, செய்யாது எனும் எதிர்மறை வினையெச்சங்களிலும், வாராத, செய்யாத எனும் எதிர் மறைப் பெயரெச்சங்களிலும் காணுேம்’ எனும் தன்மைப் பன்மை வினை முற்றிலும், அஃது இடம் பெற்றுள்ளதைக் காணலாம். வேண்டா எனும் பழந்தமிழ் வடிவு இன்று வேண்டாம் என வழங்குகிறது.’

சங்க கால்த்தில் அல், இல் என்பன எதிர்மறை இடை நிலைகள்ாக வழங்கின. அவற்றேடு பால் ஈறுகளும் சேர்ந் தன.

செல்லலம், நில்லலன், பேணலர், கொள்ளலிர்.”

திருக்குறளில் இல், இல்லை என்பன பால் ஈறு பெருமல் வழங்குகின்றன.

யாம் கண்டது இல் -(திருக். 1071)

யாம் அறிவது இல்லை -(திருக். 61% ) தற்காலத்தில் , என்பன தொடர் நிலையில் பயனிலைகளாக நின்று எதிர்மறைப்பொருளைத் தருகின்றன.

கண்டது இல்லை வர இல்லை செய்வது இல்லை பேசுவது அல்ல வர அல்ல

நேற்று, இன்று, நாளை என்பன சில சொற்களுக்கு முன்னின்று காலங்களைக் காட்டுகின்றன.

1. D. V. M. – Ls. 332 2. D. V. M.—L14. 333 3. D. V. M.-u. 334