பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

3. எதிர்வு

தொல்காப்பியர் எதிர்காலத்திற்கென எவ்விடை நிலையையும் குறிப்பிடவில்லை. என்றாலும், செய்த, செய் யும் என்னும் வாய்பாடுகளால் ‘த் என்பது இறப்பைக் காட்டுதலையும் ‘உம்’ என்பது நிகழ்வையும், எதிர்வையும் காட்டுதலையும் புலப்படுத்துகிறார்.’ -

கிறு’ என்பது நிகழ்வுக்குரிமையாக, ‘உம்’ என்பது

எதிர்வுக்குரிமையாயிற்று. இவையே யன்றி வ, ப என்பன எதிர்கால இடைநிலைகளாகவும், கு எதிர்கால விகுதியாக வும் வழங்குகின்றன.

செய்வேன், உண்பேன், வருகு

தன்மை

தன்மையில் து, தும் என்பன இறப்பு, எதிர்வுக்கு இடம்பெற்றன.

வருது, வருதும் முன்னிலை

றி, தி, இர் என்பன முன்னிலையில் நிகழ்வு, எதிர்வு களைக் காட்டின.”

என்றி, படர்தி, அறிதிர் 4. கில் என்னும் இடைச்சொல்

கில் எனும் இடைச்சொல் கிறு, கின்று என்பவற்றேடு தொடர்புடையது. கரக்கிற்பென், காண்கிற்பார் இவை போன்ற வடிவங்களில் இச்சொல்லைக் காணலாம்.

இவ் வழக்குக் கலித தொகைக்குப் பின்னே தோன் றிற்று.”

1. D. V. M.—Lj. 244

2. D. V. M. —-l u. 245