பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235

வினையும் தெளிவான கால இடைநிலைகளைப் பெற்றிருக்க வில்லை. இறத்த கால வினைகள் மட்டும் தெளிவான கால இடைநிலைகளைப் பெற்றிருந்தன.

‘த் இறந்தகால இடைநில யாகும். அதன் மாற்று வடிவங்கள் ட், ற் என்பன. இவையே யன்றி இகரமும் இறந்த காலம் காட்டியது.

2. நிகழ்வு

கிறு, கின்று என்பன பிற்காலத்தில் இடம்பெற்றவை. முதன் முதலாகச் சேர்கின்ற’ எனும் சொல் பரிபாடலில் (22-35) வருகிறது. அடுத்துச் சிலப்பதிகாரத்திலும், மணி மேகலையிலும் வருகிறது.1

ஓசனிக்கின்ற, ஊர்கின்ற, வடிவங்கள் உருள் கின்ற . - சாதிக்கின்ற -மணிமேகலை வடிவு.”

பண்டைக் காலத்துக் கின்று, பெயரெச்ச வடிவங்களி லேயே இடம் பெற்றுள்ளது. ஏழு, எட்டாம் நூற்றண்டு களில் ஆழ்வார், நாயன்மார் பாடல்களில் முற்று வடிவங் களிலும் கின்றுஇடம்பெற்றுள்ளது.”

பதினேராம் நூற்றாண்டில் தோன்றிய வீரசோழியம் கின்று, கிறு என்பவற்றை நிகழ்கால இடைநிலைகளாகக் குறிப்பிடுகிறது. அதனை ஒட்டி நன்னூலும் குறிப்பிடுகிறது.

ஆநின்று, ஆகிடந்து, ஆவிருந்து என்பன இடைக் காலத் தமிழில் நிகழ்கால இடைநிலைகளாக இடம் பெற்றுள்ளன. -

1. D. V. M.–Lus. 240 2. D. V. M.—LJ &#. 540 3. D. V. M. L. 240