பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

சங்க இலக்கியங்களில் வி, பி பெற்ற வடிவங்கள் வருகின்றன.’ . -

படர்வித்தவள் -கலி. 141 போர்ப்பித்திலது -புறம். 285 தற்காலத்தில் வினைச்சொற்களில் பிறவினைகளுக்குப் பதிலாகத் துணைவினைகள் சேர்கின்றன.

பேசவை; தின்னச் செய்வை, செய் என்பன துணை வினைகள். வினை வகைகள்

(1) முற்று, எச்சம் என வினை இருவகைப்படும்.

செய்யும் சாத்தன்’ என்பதே பழைய தொடராக இருந்திருக்க வேண்டும்.

அதுவே பின்னர்ப் பெயரெச்சம், வினையெச்சம் எனும் பாகுபாட்டைப் பெற்றிருக்க வேண்டும்.

பழங்காலத்தில் வினைமுற்றுகள் பால் ஈறு பெரும லேயே இயங்கின என்பது தெரிய வருகிறது.

(2) செய்த, செய்யும் என்பன தொல்காப்பியர் குறிப் பிடும் பெயரெச்ச வாய்பாடுகளாகும். செய்கின்ற என்பது நன்னூலார் நிகழ்காலத்திற்குக் குறிப்பிடும் வாய்பாடா கும். இது பிற்காலத்து மாறுதலாகும். காலம் காட்டல்

வினைச் சொற்கள் காலம் காட்டுவதில் காலந்தோறும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 1. இறப்பு

பழங்காலத்தில் இறப்பு, இறப்பல்லாத காலம் எனும் பிரிவே இருந்திருக்க வேண்டும். நிகழ்வுவினையும், எதிர்வு

1. D. V. M.–Luis. 8