பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233

மருப்பினுல் குத்தி-கலி. 106/20 வில்லினல் எய்தலோ இலர்--கலி. 137/11 கையால் அளத்தல்-பரி. 12/43’ ஒடு, ஒடு, உடன் என்பன உடனிகழ்ச்சிப் பொருளில் வருகின்றன. - -

(3) கு’ என்பது நான்கன் உருபாயினும் ‘க’ எனும் மாற்று வடிவமும் வழங்குகிறது.

‘கடிநிலையின்றே ஆசிரியர்க்க -தொல். எ.கா.389 (4) இன் என்பது ஐந்தன் உருபாகும். இஃது உவமை உருபாகிய இன’ என்பதோடு நெருங்கிய தொடர்புடையது.

(5) அது என்பது ஆறன் உருபாகும். அதளுேடு ஆது என்பதும் வழங்குகிறது. இதனைச் செய்யுள் வழக்கு என்பர்.

(6) இடம் உணர்த்தும் பல்வகைச் சொற்களும் ஏழன் உருபகளாகின்றன.

ஆன், அத்து முதலிய சாரியைகளும் ஏழன் பொருளைத் தருகின்றன

(7) விளிவேற்றுமை பெயர்ச் சொற்களின் இறுதித் திரிபு, நீள்பு, ஏ, ஈர் சேருதல் முதலிய மாற்றங்களால் அமைகிறது. - வினைச்சொற்கள்-தன்வினை, பிறவினை

தன்வினை, பிறவினைப் பாகுபாடுகள் தமிழில் இன்றி யமையாதன. மெல்லின வடிவம் தன் வினைய்ையும் வல்லின வடிவம் பிறவினையையும் காட்டுகின்றன.

சேர்ந்தேன்-தன்வினை; சேர்த்தேன்-பிறவினை. வி, பி என்பன பிறவினை விகுதிகளாக அமைகின்றன. முதன் முதலில் தொல்காப்பியத்தில் ‘அம்ம கேட் பிக்கும் (து. 731) எனும் தொடரில், பி. விகுதி காணப்படு கிறது. ”

1. D. N.–Luss. 290 2. D. V. M.—Lu&. 8 16