பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

வில்லை. எனினும், இன்று வழங்கி வரும் எழுத்துகள் பிராமி எழுத்தையொட்டி அமைந்தவை என்பதில் மட்டும் கருத்து வேறுபாடில்லை. அசோகர் கல்வெட்டெழுத்துகளும், இன்றைய தமிழ் எழுத்துகளும் மிக்க தொடர்புடையன வாகக் காணப்படுகின்றன.

பழந்தமிழ் எழுத்து வடிவங்களைப்பற்றிப் பின்வரும் மூன்று மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

(1) பண்டைக் காலத்திருந்து தமிழர் தமக்கெனத் தனி எழுத்து முறை ஒன்றனைப் பெற்றிருக்க வேண்டும். அம் முறை தன்னியல்பாகவும் அமைந்திருக்க வேண்டும். (2) சுமேரிய எழுத்தினை ஒட்டியும் பண்டை எழுத்து கள் அமைந்திருக்கலாம். பிராஹா மொழி, சுமேரிய எழுத்தினைப் பெற்றிருப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்க செய்தியாகும். -

மத்திய ஆசிய சித்திய இனத்தோடும், பிராஹா மொழி யோடும் தொடர்புறுத்தப்படும் திராவிட மொழியைச் சுமேரிய எழுத்து வரலாற்றாேடும் தொடர்புபடுத்திக் காணல் பொருத்தமே எனச் சிலர் கூறி வருகின்றனர்.

தமிழக மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் கி.மு. மூன்றம் நூற்றாண்டுக் குகைக் கல்வெட்டுகளில் பிராமி எழுத்து வழங்கியுள்ளது தென்னிந்தியாவில் வழங்கும் கிரந்தம், தமிழ், தெலுங்கு, மலேய்ாளம், கன்னடம், ஆகிய மொழிகளுக்கு அதுவே மூலம் எனத் தெரியவருகிறது. இப் பிராமி எழுத்துப் புகுந்து, பண்டைத் தமிழ் எழுத்தினை ஒழித்திருக்க வேண்டும்.

தொல்காப்பியர் காலத்து வழங்கிய எழுத்தும், குகைக் கல்வெட்டெழுத்தும் ஒன்றா, வேரு என்பதிலும் கருத்து வேறுபாடுண்டு.

(1) புத்த துறவிகள் தமக்குக் கைவந்த பிராமி எழுத்துகளால் பேச்சொலிகளையும் பிராகிருதச் சொற்களை யும் எழுதி இருக்க வேண்டும் என்பது ஒருசாரார் கருத்து.