பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

241

இதற்கெதிராக இவ் வெழுத்து வேறு, தொல்காப்பிய எழுத்து வேறு என்னும் கருத்தும் நிலவுகிறது.

(2) புத்த துறவிகள் தமிழகத்தில் வழங்கிய எழுத்து களாலேயே எழுதி இருக்க வேண்டும். அவ் வெழுத்துப் பிராமி எழுத்தே. அதுவே தொல்காப்பிய எழுத்துமாகும் எனும் கருத்தும் பலரால் வற்புறுத்தப்படுகிறது.

அசோகர் காலத்தில் புகுந்த பிராமி எழுத்துத் தொல் காப்பியர் காலத் தமிழ் எழுத்தினை ஒழித்துத் தமிழகத்தில் கால்கொள்ளத் தொடங்கிற்று. (1) கிரந்த எழுத்து, (2) பழந்தமிழ் எழுத்து (3) வட்டெழுத்து எனும் மூவகை எழுத்துகளும் அப் பிராமி எழுத்திலிருந்தே கிளைத்தன.

ஏழாம் நூற்றண்டிலிருந்தே கிரந்த எழுத்தும், பழந் தமிழ் எழுத்தும் கல்வெட்டுகளில் வழங்கத் தலைப்பட்டன. வட்டெழுத்து எட்டாம் நூற்றாண்டிலிருந்துதான் கிடைக் கிறது.

வடமொழி ஒலிகளையும், சொற்களையும் எழுதுதற்குப் படைக்கப்பட்டதே கிரந்த எழுத்தாகும்.

வட்டெழுத்தென்பதே யாண்டும் பரவி நின்ற எழுத் தாகும்.

பல்லவர் காலத்தில் கிரந்தமும் தமிழும் கலந்த கலப்பெழுத்தால் எழுதிவந்தனர். அது கிரந்தத் தமிழ் எனபபடடது.

சோழர் காலத்தில் மீண்டும் பழந்தமிழ் எழுத்துகளே கால்கொள்ளத் தொடங்கின. இக் காலத் தமிழ் எழுத்து கள் அவற்றை ஒட்டியே அமைந்து, நிலையான வடிவத் தைப் பெற்றுள்ளன.

பல்லவர் உன்னத நிலையில் வாழ்ந்த காலத்தில், தொண்டைமண்டலத்தையும்,சோழ நாட்டையும்,கொங்கு நாட்டின் ஒரு பகுதியையும் ஆண்டுவந்தனர். அதல்ை, அப்பகுதிகளில் கிரந்தத் தமிழ் வழங்கி வந்தது.

பாண்டி மண்டலம், மலைநாடு, கொங்கு நாட்டின் மற்றெரு பகுதியாகிய இடங்களில் வட்டெழுத்து வழங்கி வந்தது.’

இவ்விரு பிரிவுகளையும் ஒட்டிய எல்லைப் புறங்களில் கிரந்தத் தமிழ், வட்டெழுத்து எனும் இருவகைகளும் கலந்து வழங்கின.