பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

பல்லவர் வலி குன்றச் சோழர்கள் தலையெடுத்துத் தமிழ்நாட்டின் பேரரசர்களாக விளங்கிய காலத்தில் இந் நாடு முழுவதிலும் அவர்கள் பழந்தமிழ் எழுத்தைப் பரப்பி னர். அன்று முதல் தமிழ்நாடு முழுவதும் பழந்தமிழ் எழுத்தே வழங்கிவருகிறது.

சோழர்களின் ஆதிக்கத்தை நேராகப் பெருத மலை நாட்டில் வட்டெழுத்து வழக்கும் இருந்துவந்தது. ஆண்டுள்ளார் தங்கள் மணிப்பிரவாள மொழிக்குரிய எழுத்தாகக் கிரந்த எழுத்தை ‘ஆரிய எழுத்து’ என மாற்றி அமைத்துக்கொண்டதால், வட்டெழுத்து ஒதுக்கப்பட்டுச் சிலரால் மட்டுமே பயிலப்பட்டு வந்தது. அது கோலெழுத்து எனவும், கண்ணெழுத்து எனவும் வழங்கி நாளடைவில் மறைந்துவிட்டது.

‘வம்ப மர்க்கள் தம்பெயர் பொறித்த

கண்ணெழுத்தப் படுத்த எண்ணுப் பல்பொதி’

எனச் சிலப்பதிகாரம் அரசியலார் கையாண்ட எழுத்தைக் குறிப்பிடுகிறது. அது வட்டெழுத்தாகும்.

கிரந்தம், பழந்தமிழ், வட்டு எனும் மூவகை எழுத்து களும் தமிழ்க் கல்வெட்டுகளில் இடம்பெற்றன என்பதில் கருத்து வேறுபாடு சிறிதும் இல்லை. -

சோழர் பரப்பிய பழந்தமிழ் எழுத்துப் பிராமி எழுத் தோடு தொடர்பு உடையது என்பதிலும் கருத்து வேறு பாடு இல்லை. -

சேர நாட்டில் வழங்கிய வட்டெழுத்துப் பிராமி எழுத் திலிருந்து கிளைத்தது. என்பதிலேயே கருத்து வேறுபாடுள் ளது. சேர நாட்டு எழுத்துப் பழந்தமிழ் எழுத்தின் வழி வந்தது; அதுவே தொல்காப்பியர் காலத்தில் வழங்கிய எழுத்தாகும் எனும் கருத்து வற்புறுத்தப்படுகிறது. இதல்ை, வட்டெழுத்துப் பழந்தமிழ் எழுத்திலிருந்து நேரே கிளேத்த ஒன்று என்பது பெறப்படுகிறது.

வட்டெழுத்தும் ஏனைய கிரந்தம், பழந்த்மிழ் எழுத்துக் களைப் போலவே பிராமி எழுத்தினின்றே தோன்றியது எனத் தி நா சுப்பிரமணியம் கூறுகிறார்.’ -

1. பண்டைத் தமிழ் எழுத்துகள் பக். 106