பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243

தொல்காப்பியர் குறிப்பிடும் வரிவடிவங்கள்

எழுத்துகளின் ஒலி வடிவத்தைக் குறிப்பிடுவதைப் போலவே வரிவடிவங்கள் சிலவற்றையும், முறை வைப்பையும் குறிப்பிடுகிறார்.

முதலெழுத்துகள் ‘அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது எனபர்.

மெய்களும் எகர, ஒகர, மகரக் குறுக்கமும் புள்ளி பெறும் எனக் கூறுகிரு.ர்.

புள்ளியில்லா எல்லாமெய்யும் , உருவுரு வாகி அகர மொடு உயிர்த்தலும் ஏனை உயிரோடு உருவுதிரிந்து உயிாத்தலும் ஆயிரியல உயிர்த்தல் ஆறே’ . என உயிர் மெய்க்கு வடிவு கூறுகிறார் ஆய்தத்தை முப்பாற்புள்ளி எனக் குறிப்பிடுகிறார். எனவே, மெய்கள் புள்ளி பெற்றும், உயிர்மெய்கள் புள்ளி இன்றியும் எழுதப்பட்டன என்பதும் தெரிகிறது. எகரமும் ஒகரமும் புள்ளி பெற்றன. ஆய்தத்தை முப்பாற்புள்ளி என்றனர். ஏனைய உயிர்களைப் பற்றிக் குறிப்பிடாமையால் அவை புள்ளி பெருத தமக்கேயுரிய வடிவின என்பது பெறப் - . - வீரமா முனிவர் செய்த தொண்டு

பதினெட்டாம் நூற்றண்டில் வாழ்ந்த வீரமா முனிவர் தமிழ் எழுத்து முறையில் சில சீர்திருத்தங்களைச் செய் துள்ளார். எகரத்துக்கும், ஒகரத்துக்கும் புள்ளிகளை நீக்கி ஏகாரத்திற்குக்கால் இட்டும் ஒகாரத்திற்குச் சுழி தந்ததும் மாற்றம் விளைவித்தார்; ரகரத்திற்குக் கால் இட்டும் ஏனைய நெடில் அறிகுறிக்குக் ‘ா காலின்றி வேறுபடுத்தியும் காட்டினர்; உயிர் மெய்களுள் எகர, ஒகரங்களுக்கு ஒற்றைக் கொம்பையும், அவற்றின் நெடில் வடிவங்களுக்கு இரட்டைக் கொம்பையும் அமைத்தார்.

1. தொல்காப்பியம் எழுத்தியல் சூ. 17