பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. மெய்யொலித் திரிபுகள்

வல்லினம் ஆறு, மெல்லினம் ஆறு இடையினம் ஆறு மெய் மூவாறு எனத் தமிழ் இலக்கணங்கள் குறிப்பிடுகின்றன.

வல்லினம் மொழி முதலில் தனித்தும், இடையில் இரட்டித்தும் வருமிடத்து வல்லொலியும், ஏனையிடத்து மெல்லொலியும் உள்ளன என்பர் அறிஞர் கால்டுவெல். இக் காலத்து ஒலிப்பு முறை அதுவே.

வல்லின மெய்கள்: ககரம்

தென் திராவிடத்தில் ககரம் சகரமாக மாறியது. இது குறிப்பிடத் தக்க மாறுதலாகும். இ, ஈ, எ, ஏ, ஐ தொடரு மிடத்துக் ககரம் சகரமாகும். கன்னடத்தில் மட்டும் இம் மாற்றம் நிகழவில்லை, கன்னடத்தில் ககரத்தில் தொடங்கும் சொற்கள் தமிழில் சகரத்தில் தொடங்குகின்றன. இம் மாறுதலை அண்ண மெய்யாதல் (Palatalisation) என்பர்.

சகரமாகத் திரியுமுன் இருந்த பழைய வடிவத்தைக் கன்னட மொழியில் இன்றும் காணலாம். மாற்றம் பெற்ற தமிழ் வடிவங்கள் சில:

சிதர் (தமிழ்); கெதரு (கன்னடம்), சிதல்- (தெலு): சிரங்கு-கெரகு, சிரி-கிரி, சிரை-கெரெ, சில-கெல; சில தன்-கெலதன்; சிலை-கெலெ; சிறு-கிறு, சினம்-கினுக: சீ-கீ; சீப்பு-கீபு: செம்-கெம்; செடி-கிட: செத்து-கெத்து: